முன்குறிப்பு : ட்விட்டர் ... வலையுலகில் பழையது. எனக்கோ புதியது. கீழே உள்ளவை இன்றைக்கு ட்டிவிட்டியது. ஓகே வான்னு நீங்க தான் சொல்லனும்! யாரும் ஏதும் கருத்து சொல்லலைன்னா, சம்மதம்-னு எனக்கு வசதியா எடுத்துக்குவேன். ஜாக்கிரதை!
****
ஸ்பெக்ட்ரம் : "20,000 மாதம். 35 வருசத்துக்கு 85 லட்சம் தேவைப்படுது. பிறகு, ஏன் இவ்வளவு கொள்ளையடிக்கிறாங்க!" அலுவலக பெண்மணி அப்பாவியாய்!
****
பல மாதங்களுக்கு பிறகு வங்கியில்... தாவணியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். வேலைகளை விட்டுவிட்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
****
ஒரு பதிவை போட்டுட்டு...அதை மார்க்கெட்டிங் பண்ற வேலை இருக்கே! அய்யய்ய்ய்யோ!
****
விருதகிரி : சில படங்களை பார்த்தால் அலர்ஜி. சில படங்களின் பெயரைக் கேட்டாலே அலர்ஜி.
****
"என் கடைசி பிள்ளை தான் காப்பாத்துவான்னு, ஜோசியர் சொன்னது நடக்குதுன்னு" மணியார்டரை பெற்று சொல்கிறார் அம்மா. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.
****
உற்று கவனித்தேன். தனியாக தான் பேசிக்கொண்டிருந்தார். செல் வந்த பிறகு, எளிதாய் கண்டுபிடிக்க முடிவதில்லை.
****
4 comments:
"ஸ்பெக்ட்ரம் : "20,000 மாதம். 35 வருசத்துக்கு 85 லட்சம் தேவைப்படுது. பிறகு, ஏன் இவ்வளவு கொள்ளையடிக்கிறாங்க!" அலுவலக பெண்மணி அப்பாவியாய்!"
அலுவலகத்தில் வேலைப்பாத்தால் கூட பெண்களுக்கு அறிவு கம்மி என்பதுப் போல் உள்ளது. நிறைய கோபம் வருகிறது.த
தவித்திருக்கலாம்
"பல மாதங்களுக்கு பிறகு வங்கியில்... தாவணியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். வேலைகளை விட்டுவிட்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்."
நீங்க பிற்போக்கானவரா இல்லை ஜொல்லா?
//அலுவலகத்தில் வேலைப்பாத்தால் கூட பெண்களுக்கு அறிவு கம்மி என்பதுப் போல் உள்ளது. நிறைய கோபம் வருகிறது.தவித்திருக்கலாம்//
பல பொருளாதார பிரச்சனைகளில் சிக்கி கிடக்கும் ஒரு சராசரி மனிதனுக்கு இப்படி தோன்றுவது சகஜம். பெண்ணுக்கு தோன்றியதால்...அவர்களுக்கு அறிவு கம்மி என்றெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை
//நீங்க பிற்போக்கானவரா இல்லை ஜொல்லா?//
வேடிக்கை பார்த்ததுக்கு இப்படி ஒரு தீர்ப்பா?
Post a Comment