Monday, July 1, 2013

சமூக அக்க‌றை கொண்ட மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்!

எங்கள் பகுதியில் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் இருக்கிறார். அவருடைய சிறப்பு நோயை சரியாக கண்டறிவது! பல மருத்துவர்கள் இதில் தான் சோடை போகிறார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பு, ரூ. 150 வாங்கியவர், இப்பொழுது ரூ. 200 வாங்குகிறார். இடையில் 6 மாதங்களாக போய் பார்க்கவில்லை. இப்பொழுது விலைவாசி ஏற்றத்தினால், ரூ. 250 வாங்கலாம்.

ஏன் இவ்வளவு வாங்குகிறார் என விசாரிக்கும் பொழுது, ஒரு நாளைக்கு 100 நோயாளிகளை பார்க்கிறார். கூட்டத்தை குறைப்பதற்காக என்கிறார்கள்.

இதே மருத்துவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அருகே உள்ள வேறு பகுதியில் ரூ. 2 வாங்கி பல ஆண்டுகளாக பெருங் மக்கள் கூட்டத்திற்கு ஓய்வு இல்லாமல் மருத்துவம் பார்த்திருக்கிறார்.

ஏன் இந்த தலைகீழ் மாற்றம். அவரை கொஞ்சம் பேசவைத்தால், ஒரு நல்ல செய்தி சமூகத்திற்கு கிடைக்கும். நானே நேரிடையாய் கேட்டுவிடுவேன். ஆனால், அவர் பேசுவது ரெம்பவும் சொற்பமான வார்த்தைகள் மட்டுமே! இப்பொழுது மருத்துவர்கள் பலரும் பேசுவதே இல்லை. பேசினால், இரண்டு நோயாளிகளை பார்க்கும் நேரம் பாதிக்கும் என்ற கண்ணோட்டமாய் இருக்கலாம்.

வரலாற்றில் கனடாவை சேர்ந்த நார்மன் பெத்யூன், இந்திய மருத்துவர் துவாரகநாத் போன்ற பல சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள் புரட்சிகர இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு கடுமையாக பணியாற்றி இருக்கிறார்கள். இப்பொழுது எண்ணிக்கையில் குறைந்தாலும், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை பகிர்வோம்!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சேவைகள் (யாக நினைத்து) செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

ஆதவன் said...

அந்த டாக்டர் அட் ரஸ் குடுங்களேன்

குமரன் said...

ஆதவன்,

மருத்துவர் மனோகரன், முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம் அருகே இருக்கிறார்.