Sunday, September 14, 2008

மேலே சட்டை, துண்டு! கீழே பேண்ட்டா?

மக்கள் தொலைக்காட்சி செய்திகளை, ஆண் செய்தி வாசிப்பாளர்களை பார்த்திருப்பீர்கள். வெள்ளைச் சட்டையும், தோளில் துண்டுமாக செய்தி வாசிப்பார்கள்.

நேற்று ஒருவர் "அவர்கள் வேட்டி கட்டாமல், கீழே பேண்ட் போட்டிருப்பார்கள்" என உறுதியாய் சொன்னார்.

அதை மேலும், உறுதி செய்யத்தான் இந்த பதிவு. மக்களே இது உண்மையா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பின்குறிப்பு: அப்படியே, கீழே பேண்ட் போட்டிருந்தாலும், அது பெரிய குற்றமில்லை. ஒரு தகவலுக்காக கேட்கிறேன்

5 comments:

- யெஸ்.பாலபாரதி said...

தகவல் முற்றிலும் உண்மை தான்!

:))

dondu(#11168674346665545885) said...

நாட்டுக்கு ரொம்பத் தேவையான சந்தேகம்தேன்.

நானே இப்பின்னூட்டம் போடும்போது வெறும் வேட்டி மட்டுமே அணிந்துள்ளேன். :))

அன்புடன்,
டோண்டு ராகவன்

குமரன் said...

உறுதிபடுத்தியதற்கு நன்றி பாலபாரதி.

http://urupudaathathu.blogspot.com/ said...

முற்றிலும் உண்மையோ உண்மை ....

லக்ஷ்மி said...

நானும் இதே விஷயத்தை பத்தி யோசிச்சிருக்கேன். ஒரு வேளை பேண்ட் சட்டையோட வீட்டுலேர்ந்து கிளம்பும்போது துண்டை மடிச்சு பைல வச்சு கொண்டு வந்து காமிரா முன்னாடி மட்டும் போட்டுக்குவாங்க போலன்னு நினைச்சதுண்டு :) ஆனாலும் பண்பாட்டை உடை முதற்கொண்டு எல்லாத்துலயும் கட்டி காப்பாத்தும் மொத்த கடமையையும் வழக்கம் போல தாய் குலத்து தலைல மட்டுமே சுமத்தாம, பேருக்காவது அந்த பொறுப்பு இரு பாலருக்குமானதுன்னு நினைக்க தோணியிருக்கே, அதுவே பெரிய விஷயம்தான் இல்லீங்களா?