கனமழை வெள்ளத்தில் வீட்டில் மாட்டிக்கொண்டு, எங்கும் வெளியில் செல்லமுடியாத நிலை. நண்பர்களிடம் வாங்கி வைத்து நேரம் இல்லாமல் பார்க்காத சில படங்களை மின்சாரம் அபூர்வமாய் வந்த பொழுது, பார்த்தோம்.
***
அதில் ஒரு படம் “போய் சேரும் இடம்” (கதைப்படி இப்படித்தான் மொழி பெயர்க்க முடிகிறது என்னால்)
கதையை சுருக்கமாய் சொல்வதென்றால்...
நண்பர்களுடன் பிக்னிக் கிளம்புகிறாள் ஒரு இளம்பெண். செல்கிற வழியில் முக்கிய சாலையில், ஒரு சிக்னலில் காத்திருக்கும் பொழுது....இன்னும் சில நிமிடங்களில் கோர விபத்து நடக்க போவதாய் காட்சி படிமங்களாய் தெரிகிறது.
சுயநினைவுக்கு வந்தால் காட்சி படிமங்களாய் தெரிந்தது உண்மையில் ஒவ்வொன்றாய் நிகழ்கிறது. பதட்டமாகி அழுது வண்டியை மேற்கொண்டு நகர்த்தாமல்... வழி மறித்து நிற்க ஒரு போக்குவரத்து போலீஸ் விசாரிக்கிறார். விவரம் சொல்கிறாள். இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே, அவள் சொன்ன மாதிரியே அங்கு கோர விபத்து நடக்கிறது. (நானும் 10 ஆண்டுகளாக மேலை நாட்டு படங்கள் பார்த்திருக்கிறேன். இப்படி மனம் பத பதைக்க வைக்கிற விபத்தை எந்த படத்திலும் பார்த்ததில்லை)
இதுவரை.. இ.எஸ்.பி. சக்தி என நாம் ஏற்கனவே நாம் தெரிந்த கதை தான். இனிமேல் தான் கதையில் நாம் அறியாத திருப்பம் இருக்கிறது.
ஏற்கனவே இதே முறையில், விமான விபத்து முன்கூட்டியே அறியப்பட்டு, தப்பித்த சில பேர் அடுத்தடுத்து கோரமான முறையில் ஒவ்வொருவராக சாகிறார்கள். (முதல் பாகம் என நினைக்கிறேன்)
அதே மாதிரி இப்பொழுதும் நடந்துவிடுமோ என பயப்படுகிறார்கள். பயந்த படியே, நாயகிக்கு காட்சி படிமமாய் தெரிந்த விபத்தில் எந்த வரிசையில் இறந்தார்களோ அதே வரிசையில் ஒவ்வொருவராக நமக்கு குலை நடுங்கிறபடி மரணத்தால் அடுத்தடுத்து துரத்தப்பட்டு கோரமாய் சாகிறார்கள்.
இறுதியில்... நாயகியும், போலீஸாக வருகிற நாயகனும் ஒரு ஜிம்மிக்ஸ் வேலை பார்த்து, மரணத்திலிருந்து தப்பிக்கிறார்கள் (!).
***
கதை – பூ சுத்தல் கதை. விதிவசக் கோட்பாடு. நம்மூர் மொழியில் சொல்வதானால் எமன் பாசக்கயிறை வீசிவிட்டால், உயிரை எடுக்காமல் விடமாட்டான்.
இந்த படத்தைப் பார்த்த பிறகு, வருங்காலங்களில் ஏதேனும் விபத்தில் தப்பினால், இந்த படம் நிச்சயமாய் நம் மனக்கண்ணில் வரும்.

திரைக்கதையும், காட்சி நகர்த்துகிற விதம் தான் இந்த படத்திற்கு மிகப் பெரிய பலம். அடிதடி, திகில் படம் பார்க்கிறவர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.
****
2 comments:
மொத்தம் இந்த திரைப்பட தொடர்ச்சி மூன்று பாகம் கொண்டது. மூன்று பாகங்களிலும் ஒரே மாதிரியான கதை அமைப்புத்தான். திரைக்கதையை மாற்றி அதகளப்படுத்தியிருப்பார்கள்..
சென்ஷி,
வலையில் இதற்கான இமேஜ் தேடும் பொழுது, நாலாவது பாகம் பற்றிய இமேஜ் பார்த்தேன்.
இனிமேல் வரும் என நினைக்கிறேன்
Post a Comment