Tuesday, December 1, 2009

முகம் பார்த்து பேசுதல்!


பெண்களிடம்
முகம் பார்த்து பேசுதல்
சாத்தியமில்லாததாக இருக்கிறது
கண்கள் அலைபாய்கின்றன
முகத்துக்கு கீழே நகர்கின்றன

இந்த பிரச்சனை
எனக்கு மட்டும் தானா என்ன?
மற்றவர்களின் அனுவம் கேட்டேன்.

"முகமும் பார்க்க மாட்டேன்.
நெஞ்சும் பார்க்க மாட்டேன்.
வேறு திசை பார்த்து பேசுவேன்"
.
இவன் தேறாத கேசு.

"நெஞ்சு பார்த்தால் வில்லன்
முகம் பார்த்து பேசினால் நாயகன்
நாயகனுக்கு தான்
நாயகிகள் எளிதாக சிக்குவார்கள்
எத்தனை படம் பார்க்கிறாய்?"

இவன் வில்லன்.

நாட்கள் கடந்தன.
பெண்களை புரிந்து கொள்ள
முயன்றேன்.

பிறகு வந்த நாட்களில்
சக மனுசியாய்
சிநேகமாய் பார்த்த பொழுது
முகம் பார்த்து பேசுதல்
எளிதாயிற்று!

4 comments:

Anonymous said...

Very Nice

குமரன் said...

என்னடா 'முகம் பார்த்து பேசுதல்' 'நெஞ்சு' அது இதுன்னு எழுதுறயே நொந்தகுமாரா! யாராவது வந்து திட்ட போறாங்க! என ஒரு பக்கம் சிந்தனை.

மறுபுறம், சரியான விசயத்தை சொல்வதற்கு... சொல்வது ஒன்னும் தப்பில்லை என சிந்தனை.

சின்ன அம்மிணி வந்து 'வெரி நைஸ்' என சொன்னதும், அப்பாடா என்றிருந்தது.

நன்றி அம்மிணி.

போராட்டம் said...

நோகடிக்காதீங்க குமார்!

குமரன் said...

போராட்டத்திற்கு,

துவக்க கால தடுமாற்றங்கள், சிந்தனைகளை கிளறி எழுதுகிறேன்.

இவற்றை எல்லாம் தாண்டி வந்து, பல காலம் ஆச்சு!

தப்பா எடுத்துக்காதீங்க!