வழக்கமாய் செல்லும் சலூன் கடைக்கு நேற்று போயிருந்தேன். அந்த கடையில் நால்வர் பணிபுரிகின்றனர். நால்வரிடமும் என் தலையை கொடுத்ததில்... ஒருவர் அழகாய் வெட்ட...அவரிடமே பல மாதங்களாக தொடர்கிறேன்.
உள்ளே நுழைந்த பொழுது, நம்மாள் நடுத்தர வயதுகாரர் ஒருவருக்கு முடிவெட்ட துவங்கியிருந்தார். அடுத்து நான். ஒரு ஆளுக்கு அதிகபட்சமாக 10 நிமிடம் தானே ஆகும் என காத்திருக்க ஆரம்பித்தேன். அங்கு கிடந்த தினமலரை மேய ஆரம்பித்தேன். முக்கிய செய்திகளையெல்லாம்...படித்துவிட்டு நிமிர்ந்தால்...முடி வெட்டி, இப்பொழுது ஷேவிங்கில் இருந்தார். அடுத்து ஜூ.வி.யை நோட்டம் விட்டுவிட்டு..மீண்டும் நிமிர்ந்தால்...அவருக்கே "டை" அடிக்கத் துவங்கியிருந்தார். அடுத்து...நக்கீரனையும் படிக்க ஆரம்பித்தேன். இப்பொழுதாவது முடிந்துவிடுமா எனப் பார்த்தால்... அவருக்கு முகம் முழுவதும் ஏதோ கிரீமை ஒருவித கலைநயத்துடன்(!) பூசி..உலர்த்த ஆரம்பித்தார். எல்லாம் முடிய ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது. வெறுத்துப்போனேன்.
எல்லாவற்றிக்கும் ரூ. 900- என சொல்ல...அவரும் தந்து நகர்ந்ததும்...அதிர்ந்துவிட்டேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு முடிவெட்ட ஆரம்பித்த பொழுது ரூ. 40- பிறகு, ஏ.சி. போட்டதும் ரூ. 50 என்றார்கள். கடந்த ஆறு மாத காலமாக ரூ. 60 என உயர்த்திவிட்டார்கள். மாதம் ரூ. 60 கொடுக்கவே நம்பாடு திண்டாட்டமாக இருக்கும் பொழுது, ஒருமுறை வருகைக்கே ரூ. 900/- தந்தால்...அதிராமல்!
ஆண்களே ரூ. 900- செலவழித்தால்...பெண்கள் எவ்வளவு செலவழிப்பார்கள்? சென்னையில் அழகுக்காக கொடுக்கும் கவனம் இருக்கிறதே! விவரம் தெரிந்த காலத்திற்கு பிறகு, பான்ஸ் பவுடர் மட்டும் எப்பொழுதாவது அடிப்பதுண்டு. வினவு தளத்தை படிக்க ஆரம்பித்த பிறகு...பவுடரும் அடிப்பதில்லை. சென்னையில், கொஞ்சம் அசந்தால்...நமக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடுவார்கள். எவ்வளவு விதவிதமான ஆடைகள், அழகு நிலையங்கள்!
என் தோழிக்கு தெரிந்த ஒரு பெண் இப்படி பொருள்கள் மற்றும் ஆடம்பரத்திற்காகவே...ஒரு நிறுவனத்தின் மேலாளருக்கு மூன்றாவது மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மூன்றாவது மனைவி என டீஸண்டாக சொல்கிறேன்.
நிறுவனங்கள் உற்பத்தியை பெருக்கி பொருட்களை, பெருநகரத்தில் வந்து கோடிக்கணக்கில் கொட்டுகிறார்கள். பிறகு, சந்தை மக்களை, சொன்னதை எல்லாம் கேட்டு ஆடும் குரங்காக்கிவிடுகிறது. அதற்கு உதவி செய்கின்றன விளம்பரங்கள்...இன்னபிற! ஒரு சமூகம் புற அழகிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது! ஆனால், அக அழகிற்கு? அப்படின்னா என்ன? என்கிறீர்களா?!
7 comments:
எனக்கும் கூட குற்ற உண்ர்வு வர வச்சிட்டீங்க
விவரமானதுக்கு பாராட்டுகள்
பெண்களூர் வாங்க சாரே...
பெண்களே முடி வெட்டி எல்லா அழகு படுத்தலும் செய்ய குறைந்த பட்சம் 3000த்திலிருந்து ஆரம்பிக்கிறது சலூன் சமாச்சாரங்கள்....
நீங்க சொல்வது மிகச்சரி..
பெங்களூர்ல ரொம்பக் கொடுமைங்க.. சாதாரணமா முடிவெட்டவே 100ரூபாய் புடுங்கிடுவாங்க..
பெங்களூர் பொண்ணுங்களைப் பத்தி சொல்லவே வேண்டாம்.. மாதம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை முடி திருத்திக்கறதுக்கு 1000, 2000னு அனாசயமா செலவு பண்றாங்க..
என்னோட கொலிக் ஒரு பொண்ணுகிட்ட இது பத்திக் கேட்டேன்.. சம்பளத்தை வீட்டுக்கே கொடுக்க மாட்டாங்களாம்.. ஒன்லி மேக்கப், டிரஸ்ஸுக்கே செலவு பண்றாங்களாம்..
:-)
ha ha ha ha.. avangaluku pidichiruku pannikiraanga.. ungaluku athula enna sir prachanai?
பொரப்புலையே பணக்காரங்க செஞ்சா பரவால்லைங்க
கிராமத்திலிருந்து வந்து படிக்கற பொண்ணுகளும்
இதுக்காக நிறைய செலவு பண்றாங்க
ஹேர் ச்டுரெய்ட்டு நு நல்ல இருக்க முடிய கோர முடி ஆகி
நேட்சுரலான முகத்துல நெறைய கிரீம் பூசி கெடுத்து
அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிக்கற காச எல்லாம் குடி செவுரா ஆக்கி .....
கொஞ்சம் வயசுலேயே வசானவங்க மாறி இருக்காங்க
ஹ்ம்ம் எங்க பொய் நிக்க போகுதுன்னு தெர்ல
nice..
Post a Comment