கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Thursday, December 22, 2011
மிஷன் இம்பாசிபிள் 4 - திரைப்பார்வை
மூன்று திரயரங்குகள் கொண்ட வளாகம் அது. நான்கு காட்சிகள் என சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள். நம்பி போனோம். இரவு காட்சி மட்டும் தான் என்றார்கள். நெருக்கடியில் நண்பரின் விருப்பத்தின் பேரில் இந்த படம் பார்த்தேன்.
***
ஐ.எம்.ப் (The International Monetary Fund) ஐ சார்ந்த கதாநாயகன் இயங்கும் உளவுக்குழு ஒன்று, ஒரு பயங்கரவாதியை தேடுகிறது. அணுகுண்டால் அமெரிக்காவை தாக்க செய்ய திட்டமிடுகிறான். வெடிக்க வைப்பதற்கான கோடை (Code) ரசியாவிடமிருந்து திருடுகிறான். திருடியது தெரியாமல் இருப்பதற்காக, பிரமாண்ட கிரம்ளின் மாளிகையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்கிறான்.
இந்த வெடிவிபத்துக்கான பழி உளவு குழு மீது விழுகிறது. அவர்களின் நிலை மிகவும் சிக்கலாகிறது. மேலிருந்து எந்த உதவியும் கிடைக்க வழியே இல்லை. இந்த பழியைப் போக்க, தங்கள் உயிரை பணயம் வைத்து, இறுதியில் பயங்கரவாதியை கொல்கிறார்கள். ஏவப்பட்ட அணுகுண்டை செயலிழக்க வைக்கிறார்கள். அமெரிக்காவை மிகப்பெரிய ஆபத்திலிருந்து காக்கிறார்கள். முடிவு சுபம். குழு அடுத்த மிஷனுக்கு தயாராகிறது.
***
சில விசேஷ விளம்பர படங்களைப் பார்த்தால், சில விசயங்கள் புரியாது. 10 முறை பார்த்தால் தான் விளங்கும். அது போல இந்த படமும்! துவக்கம் முதல் இறுதி வரை விறு விறுவென போகிறது. எங்கும், எப்பொழுதும் நிதானிக்காமல் ஒடிக்கொண்டெ இருக்கிறது. ஆகையால், கதை கூட குன்சா தான் புரிகிறது. ஆக்சன் படம் என்பதால், அதில் பார்வையாளனுக்கு புரிய வைப்பதற்கு அவர்கள் மெனக்கெடவே இல்லை. மேலும், இது நாலாவது பாகம் என்பதாலும் இருக்கலாம்.
***
படம் சொல்லும் கதையை பரிசீலித்தால், நடைமுறை உண்மையெனில், அமெரிக்காவும், ஐ.எம்.எப்.மும் ஏகாதிபத்திய அரசுகளின் சொல்பேச்சு கேட்காத, உலக தலைவர்களை போட்டுத்தள்ளுகிறது. தங்கள் கொள்ளைக்காக பயங்கரவாதிகளை உருவாக்குகிறது. பிறகு, சில காலங்களுக்கு பிறகு போட்டும் தள்ளுகிறது. இந்த இடைவெளியில் எண்ணெய் வளம் போன்ற பல விசயங்களில் பல பில்லியன் டாலர்களை கொள்ளையடிக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறார்கள். ஜனநாயக ஆட்சி உருவாக்குகிறோம் என்ற பெயரில் நாட்டை ஆக்ரமித்து, தங்களது எடுபிடிகளை கொண்டு பொம்மை ஆட்சிகளை உருவாக்குகிறார்கள்.
உண்மை இதுவாக இருக்க, உலகத்தை பல இன்னல்களிலிருந்து இவர்கள் தான் மக்களை காப்பது போல, ஹாலிவுட் படங்கள் நமக்கு கதையளக்கின்றன. நாமும், சந்தோசமாய் பார்த்து மகிழ்கிறோம்.
***
இது மாதிரியான அதிரடியான படங்களை சில வருடங்களாக பார்ப்பதை தவிர்க்கிறேன். ஏனென்றால், அதிரடியான படங்கள் விறு விறு என நகருகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மெதுவாக நகர்பவை. அதனால், நல்ல படங்களை பார்ப்பதற்கான பொறுமையை காலி செய்துவிடுகிறது. இந்த படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு, இது தான் முக்கிய காரணம்.
****
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
உங்களுக்கு 50000 கடன் தரலாம்னு இருக்கேன்...எப்படி?
புதுசா வலை ஒண்ணு;
சோ'வென்ற மழை
தெரிதா-சரிதா
மிகவும் நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும்
www.shareblood.in
இந்த தளத்தைப்பற்றியும் கட்டுரை எழுதலாமே!
பலருக்கும் பேருதவியாக இருக்கும்
www.shareblood.in
இன்னும் படம் பார்க்கவில்லை..
ஆனால், நல்ல விமர்சனம்.
நன்றி.
In this movie, IMF means Impossible Mission Force, not what u've mentioned. Just be clear before write any review. Coz which leads ur review as flaw...
I know U wont publish my previous comment.. at least pls keep in mind before writing anything.. :)
அனானி அவர்களுக்கு,
தங்கள் சுட்டிக்காட்டியது சரி.
நீங்கள் சுட்டிகாட்டிய பிறகு தான் விக்கிபீடியாவில் பார்த்தால்...
The Impossible Missions Force (IMF) is a fictional independent espionage agency commonly employed by the United States government. //
தவறுகளை சுட்டிக்காட்டும் போது, ஏற்பது ஒரு பக்குவம். அது எனக்கு இருக்கிறது.
நான் எதையும் அவசரமாய் உடனுக்குடன் செய்கிற ஆளில்லை. மாதத்திற்கு நான்கு பதிவுகள் போட்டால், பெரிய விசயம்.
இனி, கவனம் கொள்கிறேன்.
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
Well done Mr. Nondakumaran. Thanks for publishing my previous comment and your acceptance. You are one of a very few in Tamil blogs, who accepts the correction. Keep it up.
Post a Comment