மொத்த கதையும் துப்பறிவது, பாலியல் காட்சிகள் என நகர்வதால், நிறைய வல்லுறவு காட்சிகள், சண்டைக் காட்சிகள், சேஸிங் காட்சிகள் என ஒரு பக்கா ஹாலிவுட் மசாலாவாக எடுக்க எல்லா வாய்ப்புகள் இருந்தாலும், இயக்குநர் அதையெல்லாம் தவிர்த்து கதையம்சம் கொண்ட, உணர்ச்சிமயமான அருமையான படமாக தந்திருக்கிறார்.
*****
கதையெனப் பார்த்தால்...
ஒரு தொழிலதிபர் தனது 80 வயதில் இறக்கிறார். அவருடைய மனைவி அவருடைய லாக்கரை திறக்கும் பொழுது, ஒரு பிலிம் சுருள் கிடைக்கிறது. அதில் ஒரு இளம்பெண், பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யும் காட்சி இருக்கிறது. பதறிப்போய், இது உண்மையானதா? அல்லது சித்தரிக்கப்பட்டதா? என அறிய தனியார் துப்பறியும் நாயகனை அமர்த்துகிறார்.
நம்மூர் கோடம்பாக்கத்துக்கு சினிமா எடுப்பது பிரதான தொழில் என்றால், துணை தொழில்களாக விபச்சாரம், ஆபாச படம் எடுத்தல் என இருப்பது போல, உலகத்துக்கே கோடம்பாக்கமான ஹாலிவுட்டிலும் பெரிய வலைப்பின்னல் இருக்கிறது. மெல்ல மெல்ல அந்த பெண்ணின் தடயங்களை கண்டுபிடித்து, தொடர்கிற நாயகன், இந்த உலகத்துக்குள் ஒரு இளைஞன் மூலம் நுழைகிறார். நடிகையாகும் ஆசையில் ஒரு வக்கிர கும்பலிடம் மாட்டி, கொலை செய்யப்பட்டதையும், இதற்காக அந்த தொழிலதிபர் இவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் கை மாற்றியிருப்பதையும் கண்டுபிடிக்கிறார்.
அந்த கும்பலை ஆதாரத்துடன் கைது செய்யும் முயற்சியில் தோற்றுப்போகிறார். தொழிலதிபரின் மனைவி இது உண்மை என அறிந்ததும், தன் கணவனின் பாலியல் வக்கிரத்துக்காக ஒரு பெண் கொலை செய்யப்பட்டதை அறிந்து வருந்தி தற்கொலை செய்துகொள்கிறார். நாயகன் இறுதியில் என்ன செய்தார் என்பது சொச்ச கதை.
****
மொத்த கதையும் துப்பறிவது, பாலியல் காட்சிகள் என நகர்வதால், நிறைய வல்லுறவு காட்சிகள், சண்டைக் காட்சிகள், சேஸிங் காட்சிகள் என ஒரு பக்கா ஹாலிவுட் மசாலாவாக எடுக்க எல்லா வாய்ப்புகள் இருந்தாலும், இயக்குநர் அதையெல்லாம் தவிர்த்து கதையம்சம் கொண்ட, உணர்ச்சிமயமான அருமையான படமாக தந்திருக்கிறார். முழுக்க முழுக்க மனித உணர்ச்சிகள் எல்லாவற்றையும் கொன்று, பணம், பணம் அதற்காக எதை வேண்டுமென்றாலும், எந்த உணர்ச்சியுமில்லாமல் கொல்லலாம் என்கிற ஹாலிவுட்டின் நிழல் உலகம் உண்மையில் அதிர்ச்சியானது. இந்த படத்தை பார்த்த பிறகு, ஆபாச படங்கள் யாருக்கும் அந்த படத்தில் நடிக்கும் பெண்ணின் உணர்வுகள் பற்றி ஒரு கணமாவது சிந்திக்கவைக்கும்.
இயக்குநர் மிஷ்கின் இந்த படத்தின் மைய கருத்தை உள்வாங்கிகொண்டு தான் 'யுத்தம் செய்' படத்தின் கதையை எழுதியிருக்கலாம். இந்த படம் சப்-டைட்டில்களுடன் கிடைக்கவில்லை. இருப்பினும் அது பெரிய பிரச்சனையாக இல்லை.
நாயகன் நிக்கோலஸ் ஏற்கனவே சில ஹாலிவுட் மாசாலா படங்களில் பார்த்திருக்கிறேன். படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். 1999 வெளிவந்த படம். இந்த பட வெற்றியில் இரண்டாவது பாகம் கூட 2005ல் வெளிவந்திருக்கிறது.
அனைவரும் பார்க்கவேண்டிய படம். வினவில் தான் இந்த படத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். இந்த படத்திற்கு அருமையான விமர்சனத்தை எழுதியிருந்தார்கள். இந்த பதிவை எழுதுவதற்கு கூட அந்த விமர்சனத்தை அறிமுகபடுத்துவதற்காக தான்!
8 MM - திரைவிமர்சனம் - வினவு