சமீபத்தில் நண்பரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தனிநபர் கடன்கள் வழங்கும் பிரபலமான நிறுவனத்தின் கலெக்சன் ஏஜெண்டாக பணி செய்து கொண்டிருந்தார்.
அவருடைய சிறப்பு பணி என்னவென்றால், கடன் வாங்கிவிட்டு, எஸ்கேப் ஆகிவிடும் நபர்களை கண்டுபிடித்து, வசூலிக்கும் பணி. தொலைந்து போனவர்களை கண்டுபிடிப்பவர் என்பதால், அவருக்கான கமிசன் தொகை அதிகம்.
இது கொஞ்சம் சிரமமான காரியமாயிற்றே! எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்றால், அது நிறைய வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று முகநூல் வழியாக கண்டுபிடிப்பது. அதில் அவர்கள் வேலை செய்யும் ஊர், அலுவலகம் என பகிர்ந்துகொள்வதால், எளிதாய் கண்டுபிடித்துவிட முடிகிறது என்றார்.
சமீபத்தில், ஒரு கட்டுரை வாசிக்கும் பொழுது அமெரிக்காவில் வேலைக்காக வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பொழுது, முகநூலில் விண்ணப்பதாரர்கள் என்ன கருத்துக்களை பரிமாறிக்கொள்கிறார்கள் என பார்த்தே, 80 சதவிகித விண்ணப்பங்களை வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள் என பார்த்தேன்.
சமீபத்தில், அலுவலக நண்பர் தன் அண்ணன் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள். அவரைப் பற்றி புரிந்துகொள்ள முகநூலில் என்ன கருத்துக்கள் எழுதியுள்ளார். பகிர்ந்துகொண்டுள்ளார் என்பதை பார்த்தார்.
ஜனவரி மாதம் வெளிவந்த வினவில் வெளிவந்த கட்டுரையில் முகநூலை கல்லூரி மாணவர்கள் பெண்களை தொடர்பு கொண்டு, பாலியல் வக்கிரங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை படிக்கும் பொழுது, அயர்ச்சியாக தான் இருந்தது.
சமூகம் பல்வேறு கோளாறுகளில் சிக்குண்டு இருக்கும் பொழுது, முகநூல் மட்டும் எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும்? நல்ல சமூகத்திற்கான போராட்டம் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கவேண்டும்.

3 comments:
நல்லதை மட்டும் ஆய்ந்து தேர்ந்து பயன்படுத்துவோம்.
நாகு
www.tngovernmentjobs.in
KALVI KARAYILA KARPAVAR NAAL SILA........................

Post a Comment