இயக்குநர் வெற்றிமாறனை பிடிக்கும் என்பதால், உதயத்தை நம்பி பார்த்தேன். ஏற்கனவே கேடி பில்லா, கில்லாடி ரங்கா பார்த்துவிட்டு நொந்து போயிருந்தேன். இந்த படம் ஆறுதலாய் இருந்தது. இப்பவெல்லாம் கேடி பில்லா, கில்லாடி ரங்கா போன்ற கதைகள் குறைந்த பட்ஜெட் நிறைய கல்லா கட்டுவதால், தயாரிப்பாளர்களால் நிறைய விரும்பப்படுகிறதாம். கஷ்டம். கஷ்டம். :(
****
கதை எனப் பார்த்தால்...
சென்னையை சேர்ந்த நாயகன் பெங்களூருவில் படிக்கிறார். காதல் வயப்படுகிறார். ஒரு இந்துத்துவா பிரமுகரின் பெண் என்பதால், காதலுக்கு தடை போடுகிறார். கல்லூரி இறுதி தேர்வின் பொழுது, நாயகியை சென்னைக்கு அழைத்துவந்துவிட்டால், பிரச்சனையில்லை! வக்கீல் மாமா காப்பாற்றுவார் என நண்பர்களின் உதவியுடன், பெண்ணுடன் பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி கிளம்புகிறார். அதற்குள் அத்தனை களேபரங்களும் நடக்கின்றன. இறுதியில் சுபம்.
****
வெற்றிமாறன் முதன்முதலில் இந்த படத்தை தனுசை வைத்து எடுக்க முயற்சித்து, பல தயாரிப்பாளர்கள் கைமாறி இரண்டு நாள்கள் ஷூட்டிங்கெல்லாம் நடத்தி நின்று போனபடம். இப்படி பலர் கைமாறிய கதையே மிக சுவாரசியமான கதையாய் இருக்கும் போலிருக்கிறது. அந்த கதையை இப்பொழுது, தனது உதவி இயக்குநருக்காக தூசி தட்டியிருக்கிறார்.
படம் நான் லீனியர் முறையில் நகர்கிறது. போலீஸ் அதிகாரி நாயகனின் நண்பர்களை விசாரிக்க அடிக்கும் பொழுது, அழுதுகொண்டே நாயகன் - நாயகியின் காதலை விவரிப்பது சுவாரஸ்யம். அவர்களுக்கு இடையிலான காதலை இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லியிருக்கலாம். படம் பெரிய நீளமும் இல்லை. 2 மணி நேரம் 11 நிமிடங்கள் தான். ஒன்றிரண்டு பாடல்களை வெட்டி இருப்பார்கள் போலிருக்கிறது! காதலர்களை துரத்துகிற காவல்துறை அதிகாரி நன்றாக செய்துள்ளார். சித்தார்த்தை இவ்வளவு இறுக்கமாக காட்டியிருக்க தேவையில்லை. பையா படத்திற்கு பிறகு நீண்ட நெடுஞ்சாலைகளில் தட தடவென பயணிக்கிற கதை!
இப்பொழுதெல்லாம் படம் தென்னிந்தியாவிற்கே சேர்த்து தான் பலரும் எடுப்பதால், படத்தில் எல்லா மொழிகளும் பேசுகிறார்கள். இப்பொழுதெல்லாம் குடி, பார் வராத படங்களே இல்லை. இந்த படமும் அப்படியே!
கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பெண்ணுக்கு, 18 வயது முடிந்துவிட்டால் மேஜர் என படம் முழுவதும் பேசுவது பரதேசி படத்தில் 48 நாட்கள் நடத்தி கூட்டி போவது போல பெரிய ஓட்டை.
ஒருமுறை பார்க்கலாம். பாருங்கள்.

1 comment:
பரவாயில்லை எனலாம்...
விமர்சனத்திற்கு நன்றி...
Post a Comment