Friday, July 5, 2013

இளவரசனின் மரணம் எழுப்பும் கேள்வி!

வயது வந்த ஒரு பையனும், ஒரு பெண்ணும் தான் விரும்பியபடி திருமணம் செய்வதில் எத்தனை சிரமங்களை ஒரு பிற்போக்கு சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது! தமிழனாகிய ஒருவரும் தலைகுனிய வேண்டிய அவமானம் இது!

அப்பாவின் இறப்பின் பொழுது சடங்குகள் செய்ய மறுத்த பொழுது, சித்தப்பா ஒருவர் எனக்கு விவரம் தெரிந்து, "கடந்த 25 ஆண்டுகளாக இப்படி யாரும் சடங்கு செய்ய மறுத்ததில்லை" என தன் எதிர்ப்பை கோபமாய் கேட்டார். ஒருபக்கம் நாம் போராடுகிறோமே என என்னளவில் சந்தோசம். மறுபக்கம் 25 ஆண்டுகளாக யாரும் போராடவில்லையே என்ற வருத்தம் வந்தது.

நிறைய பதிவுகள். வருத்தங்கள். சரிதான். இளவரசனின் மரணத்திற்கு உண்மையிலேயே வருந்தினால், சாதியற்ற சமூகம் உருவாவதற்கு இதுவரை சமூகத்திலோ, தன்னளவிலோ என்ன செய்துவிட்டோம் என நம்மை நாமே உரசிப்பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு சாதியில் திருமணம் செய்துகொண்டு, எல்லாவித சாதி, சடங்கு சம்பிரதாயங்களையும் செய்துகொண்டு,  சாதிய சமூகத்தில் நாமும் ஒரு அங்கமாய் இருந்துகொண்டு, எப்படி இளவரசனின் மரணத்திற்கு வருந்துவது! இது ஒரு முரண்பாடு!

அதேபோல, தனிநபர்களாக இருந்துகொண்டு, எது ஒன்றையும் சாதிக்கமுடியாது என்பதும் உண்மை. தான் சரியென நினைக்கும் ஏதாவது ஒரு முற்போக்கு அமைப்பில் சேர்ந்து இயங்கவேண்டும். அது தரும் பொறுப்பான வேலைகளை இழப்புகளை தாங்கிகொண்டு களத்தில் பணியாற்ற வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல், தனிநபர்களாக இருந்துகொண்டு என்ன செய்யமுடியும் என்றால், முகநூலில் வன்னிய சாதி வெறியர்களின் முகத்தில் மீது கற்பனையாக ஒரு குத்து குத்தலாம். அதிகபட்சமாக வார்த்தைகளில் கொலைவெறியோடு ராமதாஸை தூக்கில் போடலாம்! நடைமுறையில் ஒன்றையும் சாதிக்கமுடியாது!

4 comments:

அன்பன் said...

நீரு களத்தில் என்ன செய்தீரு?

குமரன் said...

அன்பன்,

இது கேட்கவேண்டிய கேள்வி தான். ஆனால், அதோடு, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்.

என்னளவில் நான் சரியென நினைக்கும் கொள்கைகளை எவ்வளவு இழப்புகள் வந்தாலும் அதை நடைமுறையில் நிறைவேற்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் போராடியிருக்கிறேன். பதிவில் சொன்னது போல பல மூட நம்பிக்கை சடங்குகளை மறுத்திருக்கிறேன். சமீபத்தில் அக்கா பெண்ணுக்கு சடங்கு என்றார்கள். போகவில்லை. ஒரு சாதியில் திருமணம் செய்யக்கூடாது என்ற கருத்தில் அழுத்தமாய் நிற்கிறேன்.

நான் சரியென நினைக்கும் ஒரு அமைப்பில் முறையாக சில ஆண்டுகளாக இயங்கிகொண்டிருக்கிறேன். இளவரசனின் மரணத்தை ஒட்டி, பாமக ராமதாஸை கைது செய் என நாளை நடக்கும் ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கிறேன்.


மொட்டைபையன் said...

ஏன் அங்க போயி முட்டிகிறீரு...திருமாவளவனையும் கைதுசெய்ய சொல்லி போராடுமைய்யா........அவருந்தானே கட்ட பஞ்சாயத்து பண்ணுறாரு

மொட்டைபையன் said...

ஏன் அங்க போயி முட்டிகிறீரு...திருமாவளவனையும் கைதுசெய்ய சொல்லி போராடுமைய்யா........அவருந்தானே கட்ட பஞ்சாயத்து பண்ணுறாரு