RIO 2011 பறப்பதற்கு முன்பே காட்டிலிருந்து நீலவண்ணக்கிளி பிடிக்கப்பட்டு, சிறுமி லிண்டாவின் கண்ணில் பட்டு, லிண்டோவோடு அமெரிக்காவில் வளர்கிறது. இது அரிய வகை இனம். என்னிடம் ஒரு பெண்கிளி இருக்கிறது. இரண்டையும் இணைத்தால் இதன் இனத்தை காப்பாற்றலாம் என ஒரு விலங்கியல் மருத்துவர் பிரேசில் ரியோ டி ஜெனிரோவிலிருந்து வந்து சொல்கிறார்.
'சரி' என கிளம்புகிறார்கள். போன நாளே இரவில், பறவைகளை கடத்தும் கடத்தல்காரர்கள் எல்லா பறவைகளோடு கிளிகளையும் கடத்துகிறார்கள். அதற்கு பிறகு, லிண்டாவும், மருத்துவரும் தேடு தேடு என தேடுகிறார்கள். கடத்தல்காரர்களிடமிருந்து கிளிகள் தப்பிப்பது, அவைகளுக்குள் காதல், ஊடல், நண்பர்களின் உதவி, சேஸிங், மீண்டும் வில்லன், இறுதியில் சுபம் என முடிகிறது.
நீண்ட நாள்களுக்கு பிறகு, துவக்கம் முதல் இறுதிவரை தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவும், ஜாலியாகவும் பார்த்த படம். படம் வாங்கிய நாளிலிருந்து அண்ணன் மகன் இந்த படத்தை இருபதாவது முறையாக சிரித்து சிரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான். நானும் காமிக்ஸ் படித்து வளர்ந்தவன் என்பதால் இந்த மாதிரி அனிமேஷன் படங்கள் நிறைய பிடிக்கும்.
படத்தில் நாயகியை அறிமுகப்படுத்தும் பொழுது எப்படி ஒரு 'பில்டப்போடு' அறிமுகம் செய்வார்களோ, அதே போல் பெண்கிளியையும் அறிமுகப்படுத்துகிறார்கள். நாயகன், நாயகி காதல், வில்லனின் தலையீடு என வழக்கமான வணிக ரீதியான போக்கில் கதை பயணிப்பது மைனஸ். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியில் இரண்டாவது பாகத்தை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பறக்க தெரியாத ஆண்கிளியிடம், "பறத்தல் என்பது சுதந்திரம்" என பெண்கிளி உணர்ந்து சொல்லும். உண்மை தான்.
மதுரையில் ( மீனாட்சி பவன் உணவகத்தில் சுதந்திர போராட்ட நிகழ்வுகளை புகைப்படங்களாக மாட்டி வைத்திருந்தார்கள். இப்பொழுதும் இருக்கும். சாப்பிடும் பொழுது, அங்கே காதல் பறவைகளை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்ததை பார்த்தேன். குறிப்பு எழுதும் பதிவேட்டில், "மனிதர்களின் சுதந்திரத்தை மதிக்கும் நாம், பறவைகளின் சுதந்திரத்தையும் நாம் மதிக்கலாம்" என எழுதிவந்தேன். அடுத்தமுறை போயிருந்த பொழுது, அங்கு அந்த கூண்டு இல்லை. ஆனால், அங்கே, மீன் தொட்டி இருந்தது. அதில் மீன்கள் நீந்திக்கொண்டிருந்தன. :)

1 comment:
கிளி தப்பிட்டு மீன் சிறைப்பட்டுடுச்சா?!
Post a Comment