அம்மாவை எனக்க்கு ரெம்ப பிடிக்கும். அம்மாவின் வார்த்தைகளுக்கு மிகுந்த மரியாதை தருபவன் நான். ஆனால், பொது விசயங்களிலும், வீட்டு விசயங்களிலும் பல சமயங்களிலும் அம்மாவிற்கும், எனக்கும் வாக்குவாதம் வரும். அம்மாவைப் பிடிப்பதால், அம்மாவின் பிற்போக்குத்தனமான கருத்துக்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது! பாசம் உள்ள அம்மா தான் பிற்போக்குத்தனங்களையும் கொண்டிருக்கிறார். அம்மாவை நேசிக்கிறேன். அம்மாவிடம் உள்ள பிற்போக்குத்தனங்களை வெறுக்கிறேன். இப்படி தொடர்ச்சியாய் அம்மாவிடம் விவாதிப்பதால், எது பிடிக்கும்? எது பிடிக்காது? என அம்மாவிற்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு.
ஆனால் அண்ணன் அப்படியில்லை! அம்மா என்ன சொன்னாலும் அமைதியாக தலையை தலையை ஆட்டிவிட்டு, அந்த பக்கம் போய் மறந்துவிடுவான். நிறைய சண்டைப் போடுகிற என்னைவிட அம்மாவிற்கு அண்ணனின் மீது நிறைய வருத்தம். அதனால், அண்ணணைப் பற்றி நெருங்கிய சொந்தங்களிடம் புலம்பிக் கொண்டிருப்பார்.
இந்த தெளிவு ஒரு சமயத்தில் கைவரப்பெற்ற தெளிவு. பலருக்கும் இதில் குழப்பம் இருப்பதால் தான், பாசமுள்ள அம்மா/அப்பாவை எப்படி எதிர்த்து பேசுவது? என சரிக்கும் தவறுக்கும் அல்லாடி தவறான முடிவு எடுக்கிறார்கள்.

3 comments:
புரிதலில் வேறுபாடு இருப்பது உண்மை தான்...
வணக்கம்
நன்றாக சொல்லியுள்ளிர்கள் லாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எங்கள் வீட்டிலும் இதே கதை தான். எனக்கும் என் அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம்! எப்போதுமே சண்டை தான். சண்டை போட்டாலும் கடைசியில் அவர் சொன்னபடி தான் கேட்பேன். என் தம்பி சண்டை போடமாட்டான். சொன்னதையும் செய்ய மாட்டான். இருவருக்கும் இடையில் பெருத்த இடைவெளி எப்போதுமே!
Post a Comment