ஒரு
பொதுப்பிரச்சனையை தீர்க்க சட்ட ஆலோசனை வாங்க மக்களுக்காக போராடும் ஒரு வழக்கறிஞரை சந்திக்க
நண்பருடன் போயிருந்தேன். உள்ளே இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு கடந்து சென்ற பொழுது அவர்கள் பார்வையற்றவர்களாக
இருந்தனர்.
கொஞ்சம்
ஆர்வக்கோளாறில் விசாரித்த பொழுது, குக்கூ படத்தின் கதை உருவாக்கத்திலும், படம் எடுக்கும்
பொழுதும் பார்வையற்றவர்கள் தாங்கள் செய்த தொழிலை கூட விட்டுவிட்டு நிறைய உழைப்பைக்
கொடுத்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்தவர்கள் அதிலுள்ள பார்வையற்றவர்களைப் பற்றிய
நுணுக்கங்களை வைத்தே புரிந்துகொள்ளலாம். இரண்டு
மாதங்களில் முழுக்க முழுக்க கண் தெரியாதவர்களை வைத்து ஒரு டாகுமென்டரி எடுக்கப்போகிறேன்
என சொல்லி குறைந்தபட்ச தொகையை சம்பளமாக பேசியுள்ளனர்.
பிறகு முழு நீளப்படம் எடுப்பதாக சொல்லி எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். படம் எடுத்தவர்கள்
முதலில் பேசிய தொகையை கூட முழுதாக கொடுக்கவில்லையாம். படம் வெற்றி பெற்றால், ஒரு நல்ல தொகையை உழைப்பை
கொடுத்தவர்களுக்கு வாங்கித்தருவதாக இயக்குநர் இராஜு முருகன் வாக்கு தந்திருக்கிறார்.
படம்
நன்றாக ஓடிவிட்டது. இப்பொழுது ராஜூமுருகனையோ,
அவரது ஆட்களை தொடர்பு கொண்டால், எல்லோரும் தொடர்பு எல்லைக்கு எப்பொழுதும் வெளியே இருக்கிறார்களாம். தாங்கள் அப்பட்டமாய் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இப்பொழுது
நீதி கேட்டு வந்திருக்கிறார்கள்.
சமீபத்தில்
படம் வெற்றி பெற்ற சந்தோசத்தில் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தின் இயக்குநர் இராஜூ முருகனுக்கு
15 லட்சத்திற்கும் மேற்பட்ட ஒரு காரை பரிசளித்திருப்பதாக காரோடு இயக்குநரையும் செய்திதாளில்
துணுக்கு செய்தியாக படித்தேன்.
ஆனந்தவிகடனில்
’வட்டியும் முதலும்’ தொடரில் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றித்தான் ஓராண்டுக்கும்
மேலாக பதிவு செய்தார். இராஜூமுருகன் ஒரே ஒரு
படம் எடுத்ததும், தனது விழுமியங்களை விட்டுவிடுவாரா என்ன?
இராஜூமுருகனுக்கு இனி நிறைய வாய்ப்பு கிடைக்கும். பார்வையற்றவர்களுக்கு?
பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உரிய நீதி கிடைக்க ஆதரிப்போம்!
4 comments:
தோல்வி ஒரு அநாதை ஆனால் வெற்றிக்கு பல தந்தைகள்.
தோல்வி ஒரு அநாதை ஆனால் வெற்றிக்கு பல தந்தைகள் சங்கர் திருநெல்வேலி
தோல்வி ஒரு அநாதை ஆனால் வெற்றிக்கு பல தந்தைகள்- சங்கர் திருநெல்வேலி
தோல்வி ஒரு அநாதை ஆனால் வெற்றிக்கு பல தந்தைகள் சங்கர் திருநெல்வேலி
Post a Comment