நேற்று
எதைச்சையாய் ஒரு தமிழ் சானலில் தமிழில் ‘தி மம்மி’ ஓடிக்கொண்டிருந்தது. ’மம்மியின்’
நினைவலைகள் எழுந்து, டிவிடி வாங்கிப் பார்த்தேன்.
படம்
சம்பந்தமாக யாராவது எழுதியிருக்கிறீர்களா என தேடினால், யாருமே எழுதவில்லை. மந்திரம், மாயாஜாலம், பரபர ஆக்சன் என துவக்கம் முதல்
இறுதிவரை அட்டசாகமாக செல்லும் ஒரு படத்தைப் பற்றிய யாரும் எழுதவில்லை என்பதே ஆச்சரியமாய் இருந்தது!
*****
1290 கி.மு காலத்தில் பாரோ மன்னனின் ஆசைநாயகிக்கும் (பதம் சரியா) அரசவை குருவான Imhotepக்கும் காதல். மன்னனுக்கு தெரிந்துவிடுகிறது. அவள் தற்கொலை செய்துசெய்கிறாள். துரோகத்திற்காக, கொடூர தண்டனையாக குருவை உயிரோடு பெட்டியில் வைத்து பூட்டி, புதைத்துவிடுகிறார்கள்.
மீண்டும்
3000 ஆண்டுகளுக்கு பிறகு, 1930களில் கதை துவங்குகிறது. Imhotep புதைத்த இடத்தில் பாரோ மன்னனின் புதையலும்,
இன்னும் சில ஆச்சரியமான விசயங்களும் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. நாயகன், நாயகி
என ஒரு குழுவும், அமெரிக்கர்கள் ஒரு குழுவும் என இரண்டு குழுக்கள் பல்வேறு சிரமங்களை கடந்து அந்த
இடத்தை வந்து சேர்கிறார்கள்.
புதையலை
தேடும் முயற்சியில், உயிர்த்தெழும் புத்தகத்தை வாசித்து, யாராவது தன்னை எழுப்பமாட்டார்களா
என வெறியுடன் இருக்கும் Imhotepயை எழுப்பிவிடுகிறார்கள். இறந்தவர்களை எழுப்பியும், உயிரோடு இருப்பவர்களை
வசியப்படுத்திவிடுகிறான். Imhotep எழுந்துவிடாமல்
இருக்க பாதுகாக்கும் குழுவோடு, நாயகன் குழுவும் இணைந்து பல்வேறு பரபர காட்சிகளுக்கு
பிறகு, கொல்வதற்கான புத்தகத்தை வாசித்து இறுதியில் வில்லனை கதம் கதம் செய்கிறார்கள். ’மீண்டும்
வருவேன்’ என இரண்டாம் பாகத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு பாதாள உலகத்திற்கு போய்விடுகிறான்.
*****
Brendan
Fraser, Rachel Weisz இருவரும் சுறுசுறுப்பான, களையான நல்ல ஜோடிகள். வில்லனும் நல்ல
தேர்வு.
எழுப்புவதற்கு
கருப்பு புத்தகமும், கொல்வதற்கு தங்க புத்தகமும் நல்ல கற்பனை. வில்லனின் அடியாட்படைகளாக வரும் மம்மிகளும், அதிலும்
குறிப்பாக தேர்ச்சி பெற்ற மம்மி வீரர்களும் அருமை. (நம் காலத்தில் வாழும் ’மம்மி’ கூட
ராஜீவ்காந்தியின் ரத்தம் பட்டு தான் உயிர்த்தெழுந்தது என்பது தானே உண்மை!)
துவக்கம்
முதல் இறுதிவரை தொய்வேயில்லாமல் செல்லும் அருமையான திரைக்கதை. Vanhelsing-யை எடுத்த
இயக்குநர் தான் இதன் இயக்குநரும்! எப்பொழுதும் இரண்டாவது பாகம் வெற்றிபெறுவதில்லை.
ஆனால், இதன் இரண்டாம் பாகம், முதல்பாகத்தை விட விறுவிறுப்பான படம்! படம் வெளிவந்த சமயத்தில்
இரண்டு, மூன்று முறை பார்த்தப்படம் இது!
தேடிப்பார்க்கும்
பொழுது, ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கும் மம்மி என பல படங்கள் வெளியாகியிருக்கின்றன. தொழில்நுட்பம்
நன்றாக வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் இந்த படம் அசத்தலானது.
கோடைகாலத்தில்
குழந்தைகளோடு பார்க்ககூடிய ஜாலியான படம். பாருங்கள்.
No comments:
Post a Comment