போரூர் சிக்னலிலிருந்து குன்றத்தூர் போகிற வழியில் 11 மாடி குடியிருப்பு
கட்டிடம் இரண்டில் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் மண்ணுக்குள்
இறங்கிவிட்டதாகவும், மீதி சரிந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
அருகில் போய்ப் பார்க்க முயற்சி செய்தேன். காவல்துறையை குவித்து வைத்து, பொதுமக்களை போகவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
தூரத்தில் இருந்து பார்த்ததில் 70% கட்டிட வேலை முடிந்துவிட்டது. 2014ல் அனைத்து வேலைகளும் முடிந்துவிடும் என விளம்பரத்தியிருக்கிறார்கள். மாலை 5 மணி என்பதால் தொழிலாளர்கள் நிறைய பேர் வேலை செய்ததாக
சொல்கிறார்கள். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களும், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களும் அங்கு 100 பேர்வரை வேலை செய்து கொண்டிருந்ததாக அங்கிருந்த ஒன்றிரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தனர்.
டபுள் பெட்ரூம், டிரிபிள் பெட்ரூம் என வசதியானவர்களுக்கான
கட்டப்பட்ட குடியிருப்பு கட்டிடம் இது! பல தொழிலாளர்கள் வியர்வை
சிந்தித்தான் கட்டிடங்களை எழுப்புகிறார்கள். பொறுப்பற்றவர்களால் இப்பொழுது உயிர்களையும்
கொடுக்கவேண்டியதாகியிருக்கிறது!
கிளம்பும் பொழுது கட்டிடத்தின் வாசலில் அந்த போர்டு இருந்தது!
"Trust Heights"
இனி செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலாளித்துவ ஊடகங்கள்
வரிசையாக பட்டியலிடுவார்கள்! நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியது தான்!
வீடுகளை விற்பதற்கு Prime sristi நிறுவனம் யூ டியுப்பில் வெளியிட்ட காணொளி இது!
http://www.youtube.com/watch?v=fR3cmwdByuA
2 comments:
வணக்கம்
எல்லம் போலி வேசம் பணம் செய்யும் வேலை மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்...பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காணோளியை இணைத்தது அருமை
இந்த நிகழ்வுக்குப் பின் விளம்பரத்தின்
போலித்தன்மையை புரிந்து கொள்ளமுடிகிறது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Post a Comment