Friday, July 13, 2007

முகமூடி - கவிதை




முன்குறிப்பு :

இந்த கவிதை உங்களுக்கு புரியாவிட்டால், அய்யனார், லிவிங்ஸ்மைல் வித்யா, மிதக்கும் வெளி போன்ற இன்னபிற கவிஞர்களுக்கு சிஷ்யனாகும் சிறு முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறேன்.

புரிந்துவிட்டால்....நான் அவர்களுக்கு சிஷ்யனாக லாயக்கில்லை என அர்த்தம்.

கவிதை தொடங்குகிறது

ஒவ்வொருவருக்காவும்
ஒவ்வொரு முகமூடி
அணிந்துகொண்டேன்

அவசரத்தில்
முகமூடி மாறும்பொழுது
சில இழப்புகள்
நிறைய வரவுகள்

சில சமயங்களில்
முகமூடி அணிய மறந்தாலும்
மறக்க விரும்பினாலும்
அணிய சொல்லிஅறிவுறுத்தினார்கள்.

சுயம்
காணாமல் போகும்
பயம் வந்தது.

முகமூடிகளை
அவசரமாககளையத் தொடங்கினேன்

இன்று
முகமூடிகள் இல்லாது
சுயமாய் இருக்கிறேன்

சிலர்
முகமூடி
தயாரிப்பில்இருக்கிறார்கள்

அவர்களை தடுக்க
ஏதும் முகமூடி இருக்கிறதா!

3 comments:

Anonymous said...

puriyuthu. layakillai.

சேதுக்கரசி said...

புரியுதா இல்லையான்றது அடுத்த பிரச்சினை.. அரூப, நிசப்த, விளிம்பு, பரப்பினூடே, விரவி, இப்படியெல்லாம் ஒரு சொல்லும் கவுஜைல காணோம்.. அத விட்டுட்டு, இப்படித் தெளிவான சொற்களைப் போட்டா நீங்கல்லாம் சிஷ்யன் ஆனாப்பலதான் ;)

குமரன் said...

தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் போல, நானும் முயல்வேன்.