Thursday, July 19, 2007

பிரிய (FM) சுஜிக்கு! - 'லக லக' கவிதை







என் பிரிய சுஜிக்கு!

'லக லக லக' - மன்னிக்கனும்
உன் கல கல கல சிரிப்பொலி தான்
செல்லமாய் தலைகோதி - தினம்
என்னை துயிலெழுப்புகிறது.

நான்கு மணிநேர - உன்
'சல சல' - மன்னிக்கனும்
மழைச்சாரலான பேச்சுதான் - என்னை
இருபது மணி நேரம் இயங்க வைக்கிறது

நீ கொடுக்கின்ற - ஆரோக்கியமான
டிப்ஸ்களைக் க்டைப்பிடித்து
நான் 'பொலிவு இழந்து' - மன்னிக்கவும்
பொலிவுடன் வலம் வருகிறேன்

நீ சொல்கிற
'அறுவை' - மன்னிக்கனும்
அருமையான ஜோக்குகளை
அசைபோட்டு - நாளும்
மகிழ்ச்சியாய் வாழ்கிறேன்

உன் இனிய குரல்
கேட்க இயலாத ஞாயிறு
'இன்ப' - மன்னிக்கனும்
துன்ப நாளாய் விடிகிறது!

நீ 'கடியாய்' - மன்னிக்கனும்
கலக்கலாய் எழுதுகிற
பொங்கல் பொயட்ரி தான்
என்னையும் கவிஞனாக்கிவிட்டது.

பின்குறிப்பு : சுஜி மிர்சியில் இருந்தபொழுது சுஜிக்கு எழுதிய கடிதம். பிறகு, காபி வித் சுஜி, ஜெயா டிவி என சுற்றி, பிக் fM க்கு வந்துவிட்டார். சுஜியின் பதிலுக்காய் இன்றைக்கும் காத்திருக்கிறேன்.

6 comments:

குமரன் said...

ஆறுதல்கள் வரவேற்கப்படுகின்றன.

Test

Anonymous said...

மிஸ்டர்.
ஏற்கனவே சுச்சியின் வாய் அவரை கீழே இறக்கி விட்டது. மிர்ச்சி டூ விஜய், தென் விஜய் டூ ரேடியோ ஒன். அவரின் வாயால் அவர் பட்ட பாட்டை தினமணி அரை பக்க அளவில் அளந்திருந்தது. பாவம் நீங்க பாக்கலை போல!

லக்ஷ்மி said...

எட்டு ஆட்டத்துக்கு உங்களை இழுத்து விட்டிருக்கேன். என்னைய மனசுக்குள்ள திட்டிகிட்டேவாச்சும் பதிவை போட்டுடுங்க சீக்கிரமா.

குமரன் said...

எட்டு ஆட்டத்திற்கான அழைப்புக்கு நன்றி லட்சுமி. எட்டு நொந்த விசயங்கள் எழுதலாம் அல்லவா!

காலம் லிமிட் உண்டா இல்லையா? நொந்த விசயம் என்பதால், நான் கொஞ்சம் மெதுவாகத்தான் எழுதுவேன். மொத்தமாக நான் எழுதினால், நான் காலி.

குமரன் said...

பழுத்த மரத்தில தானே கல்லறிவார்கள். சுஜியின் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் ஏதாவது எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள்

என் தானத்தலைவியை திட்டிய விசயம் எனக்கு தெரியாமல் போனது நல்லது தான். படித்திருந்தால், என்மனம் எவ்வளவு நொந்திருக்கும்.

Anonymous said...

Interesting to know.