Wednesday, August 6, 2008

ஹெல்மெட் - சில குறிப்புகள்!



கவனிக்கவும் - திருவாளர் டிராபிக் ராமசாமி அவர்கள்
பல வண்டிகளில்
வண்டியின் உறுப்பாய்
லாக்கரில் துருப்பிடித்து
பரிதாபமாய் தொங்குகிறது.

வழுக்கைத்தலைகாரர்கள்
பெரும்பாலும் அணிவதில்லை
அவர்கள் விதிவிலக்கு
பெற்றிருக்கிறார்களா என்ன?

ஹெல்மெட் அணிவதால்
முடி கொட்டுவதாய்
நண்பன் புலம்புகிறான்
விசேஷ ஷாம்பூ
தயாரிக்கிறார்களா?

தெரிவியுங்கள்
நாலு செல்
ஆறு ஹெல்மெட்
மறந்து தொலைத்ததாய்
பட்டியல் தருகிறான்
ஹெல்மெட் அணிவதால்
மறதி அதிகமாகுமா?

ஹெல்மெட் சட்டம்
டிராபிக் போலீஸ்க்கு
அரசு மறைமுகமாய்
அறிவித்த போனஸ் அறிவிப்பா?
ரூ. 100 கொடுத்தால்
விட்டுவிடுகிறார்கள்.

தென்மாவட்டங்களில் - யாரும்
அணிவதேயில்லை
நண்பர்கள் சொன்னார்கள்.
டிராபிக் ராமசாமி
சென்னையில் மட்டும் இருப்பதலா?!

3 comments:

வால்பையன் said...

தலைகவசம் உயிர்காக்க!

அதற்கு கடுமை காட்டும் அரசு!
தனது பெயரிலேயே சரக்கு விற்பது தான் உதைக்கிறது

வால்பையன்

குமரன் said...

நீங்கள் சொல்வது போல
முரண்கள் நிறைய்ய இருக்கின்றன
வால்பையன்.

அரசு
மக்களுக்கு
நல்ல குடிநீர் தர வக்கில்லை
குடிமகன்களுக்கு
'தண்ணி' தருகிறார்கள்.

குழந்தைகளை
பள்ளிக்கு அனுப்பாதீர்கள்
அரசு அறிவுரைக்கிறது.
கல்வியை
நல்ல வியாபாரமாக்கிவிட்டது.

VIKNESHWARAN ADAKKALAM said...

:(