முன்குறிப்பு : காதலை, அதன் பிரிவின் வலியை உருகி, உருகி எழுதும் காயத்ரி அக்கா தான், இந்த 'கவிதை' எழுத ஊக்கம் தந்தவர். ஏன்னா! அவங்க சொல்கிற மாதிரி, எனக்கும் கவிதை எழுத தெரியாது. காயத்ரி அக்கா தன்னடக்கமாக அப்படி சொல்கிறார். அதை, நாம் எல்லொரும் அறிவோம். நான் தன்னடக்கமில்லாமல் (!) உள்ளது உள்ளவாறு, பச்சையாய் உண்மையை சொல்கிறேன்.
ஒரு 'கவிதை' எழுதுவதற்கே, வற்றாத மணற்கேணி மாதிரி, சோகம் பொங்கி என்னை வாட்டி வதைத்து விட்டது. காயத்ரி அக்கா தினம் ஒரு கவிதை எழுதுகிறாரென்றால், அவரின் வலியை என்னால் உணரமுடிகிறது. இனி அவர் எழுதுகிற ஒவ்வொரு கவிதையும் எனக்கும் வலிக்கும். அழுகை வரும்.
கவிதை தொடர்கிறது.
புதிதாய் பூத்த மழலையிடம்
மெளனம் யாரும் விரும்புவதில்லை
கீச்சுஅழுகுரல்தான் சந்தோசம்
புல்லாங்குழலிடம்
மெளனம் யாரும் விரும்புவதில்லை
மனதை மயக்கும் இசை தான் சந்தோசம்
பருத்தி செடியிடம்
மெளனம் யாரும் எதிர்பார்ப்பதில்லை
உடைபடும் சத்தத்தில்தான் - இங்கு
சகலருக்கும் ஆடை
மெல்ல உடைபடுகின்ற - உன்
மெளனத்தில் தான்
நம் வசந்த வாழ்க்கை.
6 comments:
http://woesofanewlywed.blogspot.com/ ல இருக்கறது நீங்களா ?
சத்தியமா நான் அவனில்லை. மன்னிக்கவும். என்னை மாதிரியே நொந்து போனவருக்கு, மரியாதை கொடுக்கனும். நான் அவரில்லை.
இனி பெயர் குழப்பம் வரும். எனக்கு முன்னாடியே பதிவாளராய்/நொந்தவராய் இருப்பதால், என்ன செய்வது என அவரையே கேட்டுள்ளேன்.
எனக்கு என்ன யோசனையென்றால், ஜுனியர் நொந்தகுமாரன் என வைத்து கொள்ளலாம் என யோசித்துக் கொண்டுள்ளேன்.
தகவலுக்கு நன்றி.
கவிதை நல்லாவே இருக்கு (ஜூனியர்)நொந்தகுமாரன்...
நல்லவேளை கொலைவெறி கவுஜர்கள் சங்கத்துல நீங்களும் சேர்ந்துட்டீங்களோன்னு நினைச்சேன்! நல்லாத்தான் இருக்கு நீங்க சொல்ல வந்த விஷயம்! நீங்க நொந்துபோகக் காரணமானவங்க லிஸ்ட்ல நான் தான் மொதல்ல இருக்கேன் போல? :)
//நல்லாத்தான் இருக்கு நீங்க சொல்ல வந்த விஷயம்! நீங்க நொந்துபோகக் காரணமானவங்க லிஸ்ட்ல நான் தான் மொதல்ல இருக்கேன் போல? :)//
வேண்டுகோளுக்கிணங்க, வந்து வாசித்து, வாழ்த்து சொன்னதற்கு நன்றி.
நீங்க லிஸ்ட்ல கடைசி. நீங்க எந்த லிஸ்ட்ன்னா, தன் எழுத்தால், சிந்தனையால் சித்ரவதை செய்த பொழுது, வேடிக்கை பார்த்தவங்க. அதனால் கடைசி!
//மெல்ல உடைபடுகின்ற - உன்
மெளனத்தில் தான்
நம் வசந்த வாழ்க்கை//
ithu top Jr.Nondha kumar
மௌனம் உங்கள் வரிகளில்
பேசியிருக்கின்றது!
Post a Comment