கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Thursday, April 23, 2009
தேர்தல் - 2009
தினந்தோறும்
பல குறுஞ்செய்திகள்
"காங்கிரஸ் கூட்டணியை
தோற்கடிப்போம்" என.
தோற்கடித்துவிட்டு..
'புரட்சித்தலைவியை
ஜெயிக்கவைப்பதா!
ஜெ.ஜெ.
ஹிட்லரின் ஒண்ணுவிட்ட சகோதரி!
'கருப்பு எம்.ஜி.ஆர் _ ஐ
ஜெயிக்கவைப்பதா!
"பேரம் படியாததால்
ஆண்டவனோடும்
மக்களோடும் கூட்டணி!"
அட போங்கய்யா!
இப்படித்தான்
பல தேர்தல்கள்
கடந்துவிட்டன!
யாருக்கும் விடிவில்லை!
தேர்தலை புறக்கணிக்கலாம்.
அதுதான்
எல்லோருக்கும் நல்லது!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
//தேர்தலை புறக்கணிக்கலாம்.
அதுதான்
எல்லோருக்கும் நல்லது! //
பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
தேர்தல் புறக்கணிப்பு ஒன்றுதான் இந்த அரசினை மறுதலிக்கிறது. இந்த அரசின் வெங்காயத்தனமான சம்பிரதாயத்திற்கு முற்று புள்ளி வைக்க கோருகிறது.மாறாக இவனுக்கு ஓட்டு போடாதே வேறு யாருக்குவேண்டுமானாலும் போடு என்பது இந்த மானங்கெட்ட சனனாயகத்தினை பலபடுத்தவே செய்யும்.
"ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?" என்ற எண்ணத்தை மனதில் தோன்றவைப்பவர்களே இந்த அரசியல்வாதிகள் தான்.
Post a Comment