பொறுப்புகள் அதிகமாக வேலைகள் அதிகரிக்கின்றன. வேலைகள் அதிகமாக, அதிகமாக பதட்டம் தான் அதிகரிக்கிறது. வேலைகள் நகர மறுக்கிறது. என்ன செய்ய செய்யலாம் என மோட்டு வளையம் பார்த்து யோசித்த பொழுது, ஒன்றும் தோன்றவில்லை. நேற்று வழக்கம்போல புத்தககடை பக்கம் போன பொழுது, ஒரு புத்தகம் கண்ணில்பட்டது. அதில் ஆலோசனைகள் பிடித்திருந்தன. உங்களுக்கும் பயன்பட்டால் சந்தோசம்!
"நேரத்தை நம்மால் நிர்வகிக்க முடியாது. நேரத்திற்கேற்ப நம்மைத்தான் நிர்வாகம் செய்யவேண்டும்" :)
"திட்டமிடுதல் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்" இது திட்டமிட விரும்பாதவர்களுக்கு இது ஒரு சாக்குப்போக்கு!"
பருண்மையாக திட்டமிடுவது பாதி வேலை முடிந்ததற்கு சமம் என மாவோ சொன்னதாக படித்தது நினைவுக்கு வருகிறது.
"நீங்கள் எதில் திறமைசாலியோ அதில் ஆதாயம் காணுங்கள். மீதி வேலையை பிறரிடம் பகிர்ந்தளித்துவிடுங்கள்"
பல சமயங்களில் எல்லா வேலைகளையும் மற்றவர்களிடம் விட்டுவிட்டு எங்கேயாவது ஓடிவிடலாம் என்று தான் தோன்றுகிறது! :)
"வாழ்வில் முக்கியமானவற்றிக்கு முன்னுரிமை தராமல், அவற்றை பின்னுக்கு தள்ளும் பொழுது, பெரும்பாலும் நல்லவையே சிறந்தவற்றிக்கு எதிரியாக அமையும்"
பேசும்பொழுது பெண்டாட்டி, பிள்ளை ரெம்ப முக்கியம் என்பார்கள். அவர்களிடம் நேரம் செலவழிக்காமல், அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அலுவலகமே கதியென்று கிடப்பர்கள். இது என்ன முரண்? என பல சமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
"கடிகாரம் திசைகாட்டும் கருவிக்கு ஒருபடி கீழே இருக்கட்டும்!"
செயல்களில் கவனம் கொடுத்து, செல்ல வேண்டிய சரியான திசையை மறந்துவிடுவது! பலருக்கும் ஏற்படும் குழப்பம் தான்!
பல சமயங்களில், வேலை ஒரு பெரிய மலையைப் போல மலைப்பை ஏற்படுத்துகின்றன!
"வேலைகளை சிறுசிறு வேலைகளாக பிரித்துக்கொள்ளுங்கள்!
நாம் செய்கின்ற வேலைகளை குறித்து வைத்து பரிசீலித்தால், எவ்வளவு பயனுள்ள வேலைகளில் ஈடுபடுகிறோம்? நாம் எவ்வளவு நேரம் வீணக்கிறோம் என நன்றாக தெரியும்! பிறகு முக்கியமான வேலைகளில் நமது கவனம் குவியும்" என்கிறார்கள்.
இன்னொரு நாளில் இன்னும் எழுதுவேன்!

1 comment:
உண்மையான கருத்துக்கள்...
Post a Comment