Wednesday, February 12, 2014

லிப்ட் கதைகள் பாகம் 2

வழக்கம் போல அலுவலகம் முடிந்து வந்துகொண்டிருந்தேன்.  சென்னையின் ஒதுக்குப்புறமான பகுதி என்பதால், குறிப்பிட்ட நேரங்களில் தான் பேருந்து வரும். அதனால் மக்கள் எல்லோரிடமும் உரிமையாய் லிப்ட் கேட்பார்கள்.  நானும் அழைத்துப்போவேன்.

இன்றும் ஒருவர் கைகாட்டினார்.  ஏற்றிக்கொண்டேன்.  கிளம்பிய கொஞ்ச நேரத்தில் வண்டியில் ஒரு சின்ன தடுமாற்றம் வந்தது. கொஞ்ச தூரம் சாலை மோசமாக இருந்ததால் தானோ என கொஞ்சம் உற்றுக் கவனித்ததில் வண்டியில் தான் தடுமாற்றம் இருப்பதை உறுதிப்படுத்தினேன்.

வண்டியில் காற்று குறைவாக இருக்கிறதோ என கொஞ்சம் நிறுத்திப் பார்த்தேன். நான்கு நாட்களுக்கு முன்பு தான் காற்று அடித்திருந்தேன்.  சோதித்ததில் காற்றுப் பிரச்சனையில்லை.

திரும்பவும் வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.  சிறிது தூரம் ஓடியதும், மீண்டும், அதே தடுமாற்றம்.  காலையில் கூட இந்த தடுமாற்றம் இல்லையே! என ஒரே யோசனை.  பழைய வண்டி என்றாலும் பரவாயில்லை. வண்டி வாங்கி ஆறு மாதம் தான் ஆகிறது.

சில சமயங்களில் வயதானவர்கள் உட்கார்ந்து வரும் பொழுது, ‘கிரிப்பாக’ பிடிக்கவில்லை என்றால், இந்த தடுமாற்றம் வரும்.  ஆனால், ஏறியிருப்பவரோ நடுத்தர வயது நபர் தான்.

கண்ணாடி வழியே பின்னாடி அமர்ந்திருப்பதை கவனித்தேன்.  ஏதும் வித்தியாசமாகபடவில்லை.

இப்படி குழப்பத்திலேயே 20 நிமிடமும் பயணம் முடிந்து, அவர் இறங்கும் பொழுது தான் கவனித்தேன்.  கொஞ்சம் தடுமாற்றத்துடன் இறங்கினார். அதே போல, நடக்கும் பொழுதும்!  சே! ஒரு ‘குடிமகனுக்காகவா’  இவ்வளவு சின்சியரா லிப்ட் கொடுத்தோம் என நொந்தே போய்விட்டேன்.  :(

தொடர்புடைய சுட்டி :

லிப்ட் - சில குறிப்புகள்

3 comments:

ராஜி said...

”குடி” மகனாய் இருந்தால் என்ன!? அவரும் ஒரு உயிர்தானே!!

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியோ சில நாட்களை தள்ளிப் போட்டு விட்டீர்கள்...!

Anonymous said...

”குடி” மகனாய் இருந்தால் என்ன!? அவரும் ஒரு உயிர்தானே!!

பாம்புக்கு பால் வார்க்க நின்னைக்கும் பேதமை

அந்த குடிமகனை அப்படியே ஒரு லாரிக்கு கீழே தள்ளி இருக்கலாம்