வைத்தி மட்டும் இல்லையென்றால் கதை கிளம்பிய இடத்திலேயே நின்றிருக்கும்! என்ன ஒரு உடல்மொழி வைத்திக்கு! கலக்கிட்டார். கரகாட்டகாரனில் வைத்தி இல்லாதது பெரும் மனக்குறை!
விசம் தடவிய கத்தியை எறிந்ததும் சிக்கல் சண்முகம் துடிதுடித்து அந்த இடத்தையே கலவரப்படுத்துவது வியப்பாக இருக்கிறது. நாலைந்து துப்பாக்கி குண்டை இதயத்திலும், அதன் அருகிலும் வாங்கி, நாலு பக்கம் வசனம் பேசும் இந்த காலத்தில், சிவாஜியின் துடிப்பு மிகை நடிப்பாக தான் மனதில் படுகிறது! :)
தேவசாசி வழிவந்தவள் மோகனாம்பாள் என்பது அவளின் அம்மாவின் நடத்தையிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது! மோகனாம்பாளுக்கு அப்பா இல்லாதது எதைச்சையானதா என்ன?
பெண் பித்தர்களாக வரும் சிங்கபுரம் மைனரும், மதன்பூர் மகாராஜவும் தனது மனைவியரின் அன்பில்/மிரட்டலில் உடனே திருந்திவிடுகிறார்கள். 100% சினிமாத்தனம். காசுள்ளவர்களின் பெண்பித்து உடனே திருந்திவிடக்கூடியதா என்ன? துவக்கத்தில் வரும் உள்ளூர் சண்டியர் நாகலிங்கத்தையாவது விட்டுவைத்தார்களே!
கண்டதும் காதல் என்பதில் எப்பொழுதும் ஐயம் உண்டு. இதில் மோகானாம்பாள் சிக்கல் சண்முகத்தின் வாசிப்பில் மெய்மறந்து காதல் கொள்வது இயல்பாகபடுகிறது!
வித்வான்களுக்கு உலக அறிவு இருக்கட்டும். உள்(ளூர்) அறிவு கூட குறைவு தான் என்பதை செவிலியருடான காட்சி வைத்தது அருமை!
சிக்கல் சண்முகத்திற்கு பொருத்தமான ஜோடி தான் மோகனாம்பாள்! நான் அழகில் சொல்லவில்லை!

No comments:
Post a Comment