1987 என காலத்தை எடுத்துக்கொண்டதற்கு என்ன காரணமாக இருக்கும்? அப்ப காதலில் உறுதியாய் இருந்தார்கள் என சொல்ல வருகிறாரா? அல்லது சாதி வெறி அப்பவெல்லாம் தலைவிரித்து ஆடியது என்கிறாரா?
இந்த கதையை சம காலத்திலும் எடுக்கலாம். சாதிவெறி சமகாலத்திலும் வெறியுடன் தான் கிராமங்களில் அலைந்து கொண்டுதான் இருக்கிறது! பா.ம.கவும் அதன் கூட்டணியான சாதி அமைப்புகளும் தமிழகத்தில் தான் இருக்கின்றன. கெளரவ கொலைகளை நிகழ்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
‘காதல்’ படம் போல எடுக்க நினைத்து, படம் சுமாராக வந்து இருக்கிறது! ’காதல்’ படத்தில் இருந்த கதை, காட்சிகளில் இருந்த நேர்த்தி இல்லை!
இரண்டு காதல் ஜோடிகள் என்பதால், எந்த காதலிலும் அழுத்தமில்லை. கண்டதும் காதல் என்பதாக தான் வேகவேகமாக நகர்த்துகிறார்கள்.
சாதி வெறியையும் அழுத்தமில்லாமல் சொல்லியிருப்பதால், படத்தில் காதலன் ஒருவர் எரிக்கப்படும் பொழுது மனம் பதைபதைக்கவில்லை.
கதை எழுதி, காட்சிகளைப் பிரிக்காமல், காட்சிகளாகவே சிந்தித்து, கதையை கோர்ப்பார்கள் போல! துண்டு, துண்டான காட்சிகளாக பல இடங்களில் தெரிகிறது.
இந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் பிடிக்காத ஒன்று - வரிவிலக்கு இல்லையா! உடனே ஆங்கிலத்தில் பெயரை வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சில லட்சங்களை வரிவிலக்காக கொடுத்தால் தான் பெயரிலாவது ’தமிழ்’ இருக்கும்!

No comments:
Post a Comment