Sunday, April 20, 2008

"ஓ" வென அழுதுவிடுகிறேன்!




வானம் வெறித்து கிடக்கிற
ஒரு உடலாவது
வாரம் ஒருமுறை கண்ணில்படுகிறது

முதலாளிக்கு பயந்து - ஓடி
தண்டவாளம் கடக்கும் மனிதர்களை - தினம்
பயத்துடன் பார்க்கிறேன்.

இயந்திர வாழ்க்கையில்
தொடரும் பயணங்களில்
மனம் மரத்துப் போய் - பார்க்க
பழகிகொண்டது.

இருப்பினும்
மோதி தெறித்து விழும்
சிதைந்த உடலிருந்து - நகைகளை
அறுத்து ஓடுகிற மனிதர்களை
கண்டால் தான்
மனம் பொறுக்காமல்
"ஓ"வென அழுதுவிடுகிறேன்.

* சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் ரயிலில் அடிபட்டு ஏழு ரயில்வே ஊழியர்கள் உட்பட 90 பேர் பலி.

தற்கொலைகள், தண்டவாளம் கடக்கிறவர்கள், வேலை செய்கிற ரயில்வே ஊழியர்கள் என கடந்த மூன்று மாதத்தில் சென்ட்ரல் - கும்முடிபூண்டி-ஆவடி பாதையில் 60 பேர்களும், சென்ட்ரல் செங்கல்பட்டு பாதையில் 30 பேர்களுமாய் 90 பேர்கள் பலி.

இதில் வேதனை என்னவென்றால் போலீசார் சம்பவ இடம் போகும் முன்னரே சிலர் இறந்துகிடக்கும் உடல்களில் இருந்து பணத்தையும், நகைகளையும் முதலிலேயே எடுத்துவிடுவதாக கூறப்படுகிறது.


- தினத்தந்தி - 20.04.2008 பக். 19 லிருந்து.



2 comments:

Anonymous said...

kodumai...

தீபக் வாசுதேவன் said...

ஒரு ஆறுதலான விஷயம் -- இருப்பு பாதைகளை கண்ட இடங்களில் கடப்பது இப்போது சட்டப்படி அபராதத்திற்குரிய குற்றம்.
வருத்தப்பட வேண்டிய தகவல் -- இந்த சட்ட்ததை அமல் இரும்புக் கரத்துடம் அமல் படுத்த வேண்டிய காவல் துறை குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.