Wednesday, April 15, 2009

தேர்தல்


அடைத்து வைத்து
மூச்சு திணறி
வெளியே வந்த
காந்தி தாத்தாவின் முகத்தில்
மலர்ச்சி புன்னகை.

கரைவேட்டிகள்
விரைப்பாய்
சந்தோசமாய்
தெருக்களில் வலம் வருகின்றன

மண்டபங்களில்
மணக்க மணக்க
ஆடுகளும்
கோழிகளும்
உள்ளே தள்ளப்படுகின்றன.

தளர்ந்து கிடக்கிற
மக்களைப் பார்த்து
வெகுசீக்கிரத்தில் சிரிப்பாள்
லட்சுமி

யாருக்கும் கொள்கையுமில்லை!
வெங்காயமும் இல்லை!
வளரட்டும் ஜனநாயகம்!
வானம் தொடட்டும்
புதிய ஊழல்கள்!
பாவம் நாடு!

4 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

உண்மையிலேயே ரொம்ப நொந்து போய் இருக்கீங்க.. விடுங்க நண்பா.. கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடும்.. இங்க பணம் இருக்குறவனுக்கு மட்டும்தான் மவுசு..

ttpian said...

சீமான் எங்கு நின்றாலும்,நான் அவருக்காக 15 நாட்கள் தேர்டல் வேலை பார்ப்பேன்!
கோ.பதி
காரைக்கால்

kalagam said...

toppu

தீபக் வாசுதேவன் said...

செய்தி தெரியுமா? வட சென்னையில் ஒரு வேட்பாளர் டெபாசிட் செய்த பணத்திலேயே ஒரு கள்ள நோட்டு இருந்துள்ளது. அதனால், 500 ரூபாய் வினியோகத்தில் எத்தனை கள்ள நோட்டுகள் கலக்கின்றதோ?