ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்துகொண்டு தான் இருக்கிறான். மேஜிக்கை ஆர்வமுடன் பார்க்க கூடிய எல்லா மனிதர்களையும் கவனிக்கும் பொழுது அப்படித்தான் எனக்கு தோன்றும். மேஜிக் கதைக்களனில் நோலனின் பிரஸ்டீஜ் (The Prestige) படம் எனக்கு பிடித்தமானது. அதற்கு பிறகு இந்த படமும்!
****
கதை எனப் பார்த்தால்...
ஒரு தச்சரின் மகன். பிரபுகுல மகள். பதின்ம வயதில் இருவரும் காதல் வயப்படுகிறார்கள். அரண்மனை அவர்களைப் பிரிக்கிறது. ஒரு பெரியவர் செய்யும் மேஜிக்கால் கவரப்படும் அவன், சீனத்துக்கு போய் மேஜிக் கற்றுக்கொள்ள கிளம்புகிறான்.
மேஜிக் நிபுணராக ஊர் திரும்பும் நாயகன் மேடை நிகழ்ச்சிகள் நடத்துகிறான். மக்களின் பாராட்டை பெறுகிறான். பிரபலமாகிறான். பழைய காதலியை சந்திக்கிறான். அவளுக்கோ அந்த நாட்டின் இளவரனுடன் நிச்சயம் ஆகியிருக்கிறது. நாயகனுக்கும் நாயகிக்கும் பழைய காதல் உறவு மீண்டும் பற்றிக்கொள்கிறது.
இளவரசன் நாயகியை மணம் செய்தால் தான், அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்கிற நிலை. அதனால், நாயகனை எப்படியாவது கைது செய்து உள்ளே தள்ள தனது அதிகாரத்தை பயன்படுத்துகிறான். இதற்கிடையில் இளவரசனுக்கும் நாயகிக்கும் சண்டை வருகிறது. அடுத்த நாள் நாயகி கொலை செய்யப்படுகிறாள்.
நாயகன் இளவரசன் தான் கொலை செய்துவிட்டான் என விசாரணை அதிகாரியிடம் கூறுகிறான். ஆதாரம் இல்லாததால் யார் கொலை செய்தார்கள் என கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் இளவரசன் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அதை மேலே அனுப்பி வைத்துவிட்டு, இளவரசனை கைது செய்ய முயலும் பொழுது, இளவரசன் தற்கொலை செய்துகொள்கிறான்.
படத்தின் கடைசி 5 நிமிடத்தில் விசாரணை அதிகாரிக்கும் நமக்கும் சில உண்மைகள் தெரியும் பொழுது, அவனும் வியக்கிறான். நாமும் ஆச்சர்யப்படுகிறோம். படத்திற்கு மாய பிம்பங்களை உருவாக்குபவன் (The Illusionist) என்ற பெயர் நச்சென பொருந்துகிறது.
****
குழந்தைகளை கவர்வதற்கு சின்ன சின்ன மேஜிக் கற்றுக்கொள்ள வேண்டும் என பலமுறை நினைத்ததுண்டு. நிறைய புத்திசாலித்தனமும், உழைப்பும் தேவை என அந்த முயற்சியில் புரிந்துகொண்டேன்.
படம் நோலனின் பிரஸ்டீஜ் படத்தைப் போல நான் லீனியர் படம் இல்லை. எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் படி நேர்கோட்டில் தான் செல்கிறது. படத்தில் காட்டப்படும் மேஜிக் வகைகள் எல்லாம் அட போட வைக்கின்றன.
படத்தில் மேஜிக் மையமானது என்றால், காதலும் அப்படித்தான். ஆனால், அந்த காதலில் அத்தனை கவனம் செலுத்தியிருக்க மாட்டார்கள். அது ஒரு குறையாக படுகிறது. நாயகன் ஏன் விஷால் போல ஒரு முக இறுக்கத்தோடு வலம் வருகிறார் என புரியவில்லை. மற்றபடி படத்தில் நடித்தவர்கள் இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் ஒரு காலத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக நாடகம், இசை நிகழ்ச்சி, மேஜிக் என இருந்திருக்கின்றன. படத்தின் பலத்திற்கு திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, கலை என எல்லாமும் உதவி செய்திருக்கின்றன. இப்படிப்பட்ட சில படங்கள் மெல்ல நகரும். அப்படி இல்லாமல், விறுவிறு என போகிறது.
சிறுவயதில் மேஜிக் என்பது ஒரு ஆசை கனவை போல இருந்து வந்திருக்கிறது. சிறுவயதில் கையை மூடி, கண் திறந்தால் ஒரு 5 ரூபாய் இருந்தால் எப்படி இருக்கும் என பலமுறை நினைத்து பார்த்திருக்கிறேன். எல்லா குழந்தைகளுக்குமே இப்படி ஒரு ஆசை கண்டிப்பாய் இருந்திருக்கும்.

2 comments:
test
மிகவும் சிறந்த படம் ஒருவேளை பிரபலமடையாத நடிகர் நடித்ததாலோ என்னவோ. பலபேர் இந்த படத்தை புறக்கணித்து இருந்தனர். நல்ல விமர்சனம்.
Post a Comment