எங்கள் தெருவில் ஒருவர் அதிமுகவில் வட்ட பொறுப்பில் இருக்கிறார். வெள்ளையும் சொள்ளையுமா எந்த வேலையும் செய்யாமல் போயும், வந்தும் கொண்டிருப்பார். வட்டிக்கு பணம் கொடுக்கிறார் என நினைக்கிறேன். ஒருமுறை வாங்கிய பணத்தை கொடுக்கவில்லை என்பதற்காக, அவர்கள் வீட்டின் வாசலில் ஒரு ஆட்டோவை பிடித்துவைத்திருந்தார்கள்.
சமீப நாட்களில் அவருடைய வீட்டம்மா (சொர்ணக்காவே தான்) வீட்டில் ரூ. 3 என அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு முட்டைகள் விற்றுக்கொண்டிருக்கிறார். எப்படி என்றால், அரசின் மலிவு விலை கடைகளில் வாங்கி வந்து விற்பதாக சொல்கிறார்கள்.
வெளி மார்க்கெட் விலை ரு.4.50 வரை விற்றுக்கொண்டிருக்கும் பொழுது, எப்படி ரூ. 3க்கு விற்கமுடிகிறது?
இப்படி ஆளுங்கட்சிகாரர்கள் வாங்கி வந்து விற்பதே அயோக்கியத்தனம் என்பது ஒருபக்கம் இருந்தாலும், எனக்கு என்ன சந்தேகம்னா? அங்கிருந்து மலிவு விலைக்கு வாங்கி வந்து விற்கிறார்களா? அல்லது திருடிட்டு வந்து விற்கிறார்களா என்று தான்!
அரசு விலை கடைகளில் முட்டை என்னவிலை விற்கிறார்கள்? உங்களுக்கு தெரியுமா? சொன்னீர்கள் என்றால், அவர்களை என்ன செய்வது என யோசித்து ஏதாவது செய்ய வசதியாக இருக்கும்!

2 comments:
அவர்களை ஆம்லெட் போடலாம்.
ஒன்னரை ரூபாய் குறைவாக இருக்கிறதே என்று வாங்குபவர்களும் குற்றவாளிகளே.
Post a Comment