Tuesday, October 18, 2011

மழைக்கு தயாராதல்!


மழைநீர் வடிகாலுக்காக‌
குப்பையும் கூழாமுமாய் இருந்த‌
மொட்டைமாடியை நன்றாக‌
சுத்தம் செய்தேன்!

ரிப்பேராயிருந்த வண்ணக்குடையை
எண்ணெய் இட்டு சரிசெய்தேன்!

புதிதாக ஒரு விக்ஸ் டப்பாவும்
சில சமஹன் பாக்கெட்டுகளும்
ஷெல்பில் கண்ணில் படும்படி வைத்தேன்!

சேறடிக்காத ஒரு ஜோடி
செப்பல் வாங்கினேன்!

வெயில் காலத்தில் போட வாய்க்காத‌
கருநிற‌ பனியனையும்
கருநிற‌ சட்டையையும்
மேலே எடுத்து வைத்தேன்!

நேற்று அறைக்கு வந்த நண்பன் சொன்னான்
சென்னையில் மழையே
10 நாள் என்பதே அபூர்வம்!
உன் பில்டப் தாங்க முடியலையே! என்றான்.

2 comments:

Nithya said...

Nice writeup and thank you for using my image :)

குமரன் said...

நித்யா அவர்களுக்கு,

அழகான கோலப்படம் தந்து உதவியதற்கு நன்றிகள்.