Sunday, October 23, 2011

நான்!


இயற்பெயர் குமரன். வயது 27, முதுநிலை பட்டம், ஒரு மிடில் நிறுவனத்தில், நிர்வாகப்பணி. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவன். பிழைப்புக்காக 5 ஆண்டுகளாக பெருநகர‌ சென்னை வாசம். புகைப்படத்தை தவிர்த்தத‌ற்கு காரணம், இயல்பில் கூச்ச சுபாவம் கொண்டவன். என் வாசிப்பு பழக்கமும், எழுத்தும் இந்த இயல்பில் பிறந்ததாகவே கருதுகிறேன்.

'வலையுலகமும்,நொந்தகுமாரனும்' (http://nondhakumar.blogspot.com/) என்ற பெயரில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிவருகிறேன்.

நொந்தகுமாரனுக்கான காரணம் வலையுலகில் துவக்க காலத்தில் வாசகனாக மட்டும் இருந்தேன். மொக்கை, ஜல்லி, கும்மியின் மிகையால், நொந்துபோய், நொந்தகுமாரன் ஆனேன். நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் சமூக பொறுப்பற்று எழுதுகிறார்களே என நொந்து, நல்ல படைப்புகளை எழுதும் முயற்சியில் தொடர்ந்து போராடி வருகிறேன்.

மாதத்திற்கு 3 அல்லது 4 பதிவுகள் எழுதி வருகிறேன்.என்னுடைய பெரும்பான்மையான பதிவுகள் சுயசரிதை தன்மை கொண்டவை. பார்த்த, பாதித்த விஷயங்களை எழுத்தில் தோழமையோடு பகிர்கிறேன்.

எளிமையாகவும், சுவாரசியமாகவும் எழுதுவதாய் உங்களைப் போல வாசித்தவர்கள் பின்னூட்டங்களில் சொல்கிறார்கள்.

மற்றபடி, எழுதுவதற்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும் என உறுதியாய் நம்புகிறவன். இலக்குகள் இல்லாத பொழுது தான் மொக்கை, ஜல்லி, கும்மி என எல்லாவித கோளாறுகளும் வந்துவிடுகின்றன. அனைவரின் நேரத்தையும் வீணடிக்கின்றன.

சாதி, மதமற்ற, ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய, ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் வாழ்வின் இறுதிவரை நிற்க விரும்புகிறவன்.

வினவு தளத்தின் தொடர் வாசகன். மக்கள கலை இலக்கிய கழகத்தின் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறவன்.

மற்றபடி, என் எழுத்தை வாசிக்கின்றவர்களுக்கும், அபூர்வமாய் பின்னூட்டமிடுகின்றவர்களுக்கும் நன்றிகள்.

சமூக அக்கறையோடு எழுதுபவர்களுக்கும், தமிழ் வலைப்பதிவுகளை எல்லாம் ஒன்று திரட்டி, பொறுமையுடன் தமிழ்மணத்தை இயக்கி வருகின்ற குழுவினருக்கும் என் நன்றிகள்.

தோழமையுடன்,

நொந்தகுமாரன்

3 comments:

Inban said...

வாழ்த்துக்கள் நொந்தகுமாரன்.
உங்கள் சாம்பார் கவிதையை முன்னமே படித்து ரசித்திருக்கிறேன்.
http://nondhakumar.blogspot.com/2010/03/blog-post.html

வினவு தளத்தில் உங்கள் மறுமொழிகளைப் படித்திருக்கிறேன்.
அடிக்கடி எழுதுங்கள். நட்சத்திர வாரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

//மற்றபடி, எழுதுவதற்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும் என உறுதியாய் நம்புகிறவன். இலக்குகள் இல்லாத பொழுது தான் மொக்கை, ஜல்லி, கும்மி என எல்லாவித கோளாறுகளும் வந்துவிடுகின்றன. அனைவரின் நேரத்தையும் வீணடிக்கின்றன.//

ஸேம் பிளட்.

குமரன் said...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி இன்பன்.

சரியாக தீபாவளி விடுமுறை காலத்தில் வந்திருக்கிறது. நான் தீபாவளி கொண்டாடுகிறவன் இல்லையென்றாலும், விடுமுறைக்காக சொந்த ஊர் செல்கிறவன்.

ஆகையால், கொஞ்சம் வேலையும், அலைச்சலும் அதிகம். இருப்பினும், தமிழ்மணம் நட்சத்திர வாரத்தை பயன்படுத்திக்கொள்வேன் என்றே கருதுகிறேன்.

குமரன் said...

பகத்,

கீழ்கண்ட மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள். நன்றி.

kumaranjana2011@gmail.com