Friday, March 14, 2014

பிச்சை போடுபவர்களின் தொல்லை!

வழக்கமாய் இரவு சாப்பிடும் கையேந்தி பவனில்...

ஒரு முப்பது வயது இளைஞர் ஒரு பெரியவரிடம் கோபமாக பேசிக்கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திவிட்டு அருகில் போனதும், இருவரும் கிளம்பிவிட்டனர்.

அவர்கள் போன இரண்டு மூன்று நிமிடங்கள் கடைக்காரர் தடுமாறித்தான் போய்விட்டார். எனக்கு நாலு இட்லி வைத்து தருவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டார்.

அந்த கடை ஓனரின் பையன் வந்ததும், அவரே அதற்கான காரணத்தையும் சொன்னார்!  ”வயதான ஒருத்தர் பிச்சை கேட்டார்னு, நாலு இட்லியை ஒருத்தன் வாங்கி கொடுத்துவிட்டு, அவன் பேசின பேச்சு இருக்கே!  சாப்பிட்டு முடிக்கிறவரைக்கும் பேசிக் கொன்னுட்டான்! வாழ்க்கையிலே இனி யார்கிட்டேயும் அந்த பெரியவர் பிச்சை கேட்கமாட்டார்”

”எதுவும் அட்வைஸ் பண்ணிணாரா!” என்றேன்.

சாப்பிட ஏதாவது வாங்கி தாங்க சார்!” என கேட்டதும்,

நான் ஒண்ணும் ராஜா இல்லை! சாதாரண ஆள் தான்! என்னை ஏன் சார்னு சொல்ற!”

“சரிங்க!

“என்ன சரி?

பதில் சொல்ல முடியாமல் ”ஙே” என பிச்சைக்காரர் முழிக்க...

நானும் உங்கூட பிச்சை எடுக்க வரட்டுமா? இப்படி எல்லோரும் பிச்சை எடுக்க வந்துட்டா, யார் தான் வேலை செய்யறது!”

இப்படியே பேசிக்கொண்டே வாங்கிக்கொடுத்த நாலு இட்லி சாப்பிட்டு முடிக்கும்வரை பேசிக்கொண்டே இருந்தாராம்.

’சரக்கு தான் காரணமா?’ என்றேன்.

”ஆமாம்!” என்றார் கடைக்காரர்.

நிறைய நாளைக்கு பிறகு வாய்விட்டு நிறைய நேரம் சிரித்தேன்! :)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாத்துக்கும் பாழாப் போக வைக்கும் சரக்கு தான் காரணம்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிச்சை எடுப்போர் தொல்லை அறிவேன், கொடுப்போர் தொல்லை முதல் முதல் கேள்விப்படுகிறேன்.
//என்னை ஏன் சார்னு சொல்ற!”

“சரிங்க!”

“என்ன சரி?”//
இன்று நன்கு சிரித்தேன்.

Unknown said...

இன்றைய பிச்சைக்காரனுக்கு இரக்கப் பட்ட நாளைய பிச்சைக்காரனோ ?