எளியவனாய் இருந்தால் - பேச்சில்
நெஞ்சில் ஏறி நின்றுவிடுகிறேன்
வலியவனாய் இருந்தால்
சேர்த்து, சேர்த்து விஷமாக்கி
விழிப்பாய் வாய்ப்பு கண்டு
மொத்தமாய் உமிழ்ந்துவிடுகிறேன்
சொல்லுக்கும் செயலுக்கும்
இடைவெளி அழிக்கப்பார்க்கிறேன்
அதென்னவோ
வரவுக்குள் செலவு செய்யும்
மந்திர வித்தையாய்
கைவர மறுக்கிறது
சொற்களற்ற செயலுக்கு
வலிமை அதிகம்
பொய்யும் புகழுமாய்
புறத்தில் பேசி பேசி
சில சமயங்களில்
எனக்குள் நானும் அதேமாதிரி
இப்பொழுதெல்லாம்
புறத்தில்
முடிந்தமட்டிலும்
பேச்சைத் தவிர்க்கிறேன்.
எனக்குள்
முற்றிலுமாய்!
3 comments:
good
நல்ல கவிதை நொந்தா
புறம் அகம் இரண்டையும் பேச்சுக்களில்லாம செய்வது சாத்தியமில்ல தலைவா வேணும்னா 'கவனி'க்கலாம்
guss u understand
நன்றி தலைவா வந்து வாழ்த்துனதற்கு!
புரிஞ்ச மாதிரி இருந்தது. கடைசியில, 'கவனி'க்கலாம் என்னமோ சொல்லி, குழப்பிட்டயே தலை!
Post a Comment