Tuesday, August 28, 2007

கனவுகள் - கவிதை!


பயணம் முழுதும் கனவுகள் சேகரித்தேன்
சுமந்து திரிந்தேன் பல காலம்
சுமைகள் அழுத்த கலைக்க ஆரம்பித்தேன்
கனவுகள் முற்றும் கலைந்த நிலையில்
இப்பொழுது

உன் கண்களைச் சந்தித்த நாள் முதலாய்
ஒவ்வொரு சந்திப்பிலும்
கனவுகளை அள்ளித் தருகிறாய் - நானும்
மகிழ்வுடன் சேகரித்து கொள்கிறேன்

தொடங்கிய புள்ளிலேயே - மீண்டும்
தள்ளிவிட்டுவிட்டாய்
நீயில்லை என்னோடு இப்பொழுது
கலைக்க மனதில்லாமல்
சுற்றித்திரிகிறேன்
நீ தந்த கனவுகளோடு.

2 comments:

குமரன் said...

சோக கவிதை. இந்த கவிதைக்கு காயத்ரி அக்கா தான் எனக்கு இன்ஸிபிரேசன்.

Anonymous said...

தொடங்கிய புள்ளிக்குப்
பின் தள்ளியும்
வீழ்த்தும் வாழ்க்கையின்
புரிந்த கணக்கு.