கண்கள் பார்த்து
வழிவது தெரியாமல் பேசி
கவனமாய் இடைவெளி நிர்வகித்து
மனதில் நெருங்கி
அதெல்லாம் - முன்பு
ஒரே ஒரு நோக்கோடு
காமம் காதலோடு வரவேண்டும்
தெளிவடைந்து...
நகர்ந்தால்
பழைய வினைகளின் விளைவுகள்
புதிய உறவுக்கு
உருவமில்லா தடையாய்
முன்வந்து நிற்கின்றன.
நீதி : முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
3 comments:
முதல் பத்தி புரியுது
2வது புரியல... :(
சோதனை கவிதை.
//முதல் பத்தி புரியுது
2வது புரியல... :( //
எளிமையான வார்த்தைகளில் கவிதை சொல்லி, யாருமே இதுவரை கவிதைக்கு நீதியும் சொல்லியிருக்க மாட்டார்கள். ம்!
அது ஒண்ணும் இல்லைங்க கவிதா! முன்னாடி தப்பு செய்றோம். பிறகு, தப்புன்னு உணர்ந்து திருந்துறோம். ஆனா, முன்னாடி செஞ்ச தப்போட ஆவி நம்மை தொல்லை பண்ணுது.
என்ன திரும்பவும் குழப்பிட்டேனோ?
Post a Comment