Friday, March 25, 2011

மனிதர்கள்!


வாழ்க்கை ஓட்டத்தில் பல மனிதர்களை கடந்து வருகிறோம். ஒவ்வொருவரும் மேலோட்டமாகமோ, அழுத்தமாகவோ சில தடங்களை நம்மிடம் விட்டுவிட்டு செல்கின்றனர்.

மனிதர்களின் நம்பிக்கை, செயல்கள் எல்லாம் சுவாரசியமானவை. மனிதர்களை கவனித்தால், நாம் நிறைய பெறலாம். சென்னை மாதிரி பெருநகரத்தில் மனிதர்களை உற்று நோக்குவதற்கு பொறுமையோ, அசை போடுவதற்கு நேரமோ வாய்ப்பதில்லை அல்லது அதற்கெல்லாம் நாம் மெனக்கெடுவதில்லை.

ஆகையால், என்னைப் பாதித்த, கவர்ந்த, சிந்திக்க வைத்த சில மனிதர்களை மெல்ல அசைபோட்டு வருகிற பதிவுகளில் உங்களுடன் பகிர்கிறேன். பகிர்வதற்கு முன்பு வரை அது என்னுடைய அனுபவம். பகிர்ந்த பின்பு, அது நம்முடைய அனுபவமாகிவிடுகிறது.

இப்படி பகிர்வதன் மூலம் என் வாழ்க்கையை ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

ஒரு பதிவர் பொறுப்புடன் எழுதுவதற்கு சக பதிவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் முக்கிய பங்குண்டு என கருதுகிறவன் நான். மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன் பேர்வழி என மொக்கை போட்டேன் என்றால், இரக்கமே இல்லாமல், கறாராக கண்டியுங்கள். மாற்றிக்கொள்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல. மற்றவர்களுக்கும் நீங்கள் செய்யலாம்.

உங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன்.

- நொந்தகுமாரன்.

2 comments:

போராட்டம் said...

தங்கள் எழுத்துநடை எப்பொழுதுமே இயல்பானதும், சுவாரசியமானதுமான நடை.எழுதுங்கள் தோழர்.தங்களது பகிர்வுகளைப் படிக்கக் காத்திருக்கிறோம்.

குமரன் said...

நன்றி தோழர்.