Saturday, October 20, 2012

திருமண வரவேற்பு - சில குறிப்புகள்!

கேமராமேன் நண்பர்.
எங்கள் பகுதியில் ஒரு வரவேற்பு.
அழைத்தார். போயிருந்தேன்.

வேடிக்கைப் பார்த்ததில்...!

வசதியான குடும்பம்!
கோட்டு சூட்டுடனும்
பளபளப்பான நகைகளுடனும்
பட்டுச் சேலைகளுடனும்
பலர் வலம் வந்தார்கள்.

மாப்பிள்ளை சகோதரியோ
மணமகள் சகோதரியோ - யாரும்
மணமக்களோடு மேடையில் இல்லை.
நியூக்ளியர் குடும்பமாய் இருக்கலாம்!

பன்னீர் தெளித்து வரவேற்க
ஜூஸ் கொடுக்க, பரிமாற
எங்கும் பணியாட்கள்.
யார் முகத்திலும்
செயற்கையாக கூட புன்னகையில்லை!
எல்லா காரியங்களையும் - ஊரில்
சொந்தங்கள் செய்வது தான் வழக்கம்.
ஊர்க்காரனான எனக்கு - எல்லாம்
புதிதாய் இருந்தது!

வருகிறார்கள். அமர்கிறார்கள்.
கலகலப்பான பேச்சு இல்லை.
கிசுகிசுவோ, பொரணியோ இல்லை.
வரிசையில் நிற்கிறார்கள்.
கவரை, பரிசை கையில் திணிக்கிறார்கள்.
சாப்பிட்டு விட்டு போய்விடுகிறார்கள்.
மனிதர்கள் சிரிப்பை
மறந்துவிட்டார்களா?!
எல்லாம் இயந்திரத்தனமாய் இருந்தது!

இனிப்பு இரண்டுவகை.
பிரியாணி, சாம்பார் சாதம்,
குட்டித்தோசை என
வகைவகையாய் நிறைய வைத்தார்கள்.
ரசம் நன்றாக இருந்தது.

18 முதல் 25 வயது வரை
பெண்களின் எண்ணிக்கையை
விரல்விட்டு எண்ணிவிடலாம்!
எண்ணினேன். :))
அழைத்து வருவது இல்லையா! (அ)
வர மறுக்கிறார்களா?!

இன்னிசை கச்சேரி பாடல்களுக்கு
குடும்பம் சூழ
40 வயதுக்காரர் கூச்சப்படாமல்
பாவனைகளோடு - உற்சாகமாய்
ஆடிக்கொண்டிருந்தார்.
பிடித்திருந்தது.

கேமராமேன்
பாடும் பெண்ணை
அடிக்கடி க்ளோசப்-ல்
காட்டிக்கொண்டிருந்தே இருந்தார்!

வந்த 600 பேரில்
மாப்பிள்ளை தான் நல்ல உயரம்.
குனிந்து, குனிந்து
கை கொடுத்து கொண்டிருந்தார்.

அம்மா, அப்பாவே
அருகில் வந்து நின்றாலும்
பெண்ணை வலது கையில் அணைத்தபடி
சளைக்காமல் கடைசிவரை
போஸ் கொடுப்பதை விடவேயில்லை!
மணமக்கள் வாழ்க!

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகள்... அப்படியே காட்சிகள் கண் முன் தெரிந்தன... வாழ்த்துக்கள்...

வாழ்க மணமக்கள் !

/// மனிதர்கள் சிரிப்பை
மறந்துவிட்டார்களா?! ///

உண்மை வரிகள்...

நன்றி...

மாதேவி said...

நகைச்சுவையாக சொல்லியுள்ளீர்கள்.

Anonymous said...

Is this called kavithai? I am surprised.

குமரன் said...

நன்றி திண்டுக்கல் தனபாலன், மாதவி அவர்களுக்கு!

குமரன் said...

அனானி அவர்களுக்கு,

இது கவிதை என கண்டிப்பாக சொல்லமுடியாது. இந்த வடிவத்தில் சொல்ல வந்த விசயத்தை சொல்வது எளியது என கருதியதால் எழுதியுள்ளேன்.

மற்றபடி, இது கவிதை என குறிப்பிடவில்லை. கவிதை என லேபிளும் கொடுக்கவே இல்லை. :)

அ. வேல்முருகன் said...

நாகரிக வளர்ச்சி அல்லது கால மாற்றம்