அந்த தெருமுனையை கடக்கும் பொழுது, அந்த நிகழ்வை பார்த்தேன். 45 வயதுக்காரர் ஒருவர் வண்டியில் இருந்து கீழே சரிந்து, வலிப்பால் கடுமையாக துடிதுடித்துக்கொண்டிருந்தார்.
உடனே அருகிலுள்ள இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். சரிந்தததில் தலையில் முடி குறைவாக இருந்ததினால், கல்லில் அடிப்பட்டு பின்மண்டையில் காயமாகி, ரத்தம் வந்துகொண்டிருந்தது.
108க்கு போன் செய்ய சொன்னார்கள். அடித்தேன். இடம் கேட்டார்கள். சொன்னேன். வந்துகொண்டிருப்பதாக சொன்னார்கள். இதற்கிடையில் வலிப்பு முடிந்து, சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அவருக்கு தெரிந்த நபர்களை வரச்சொல்லலாம் என போன் நம்பர் சொல்ல சொன்னால், அவரால் நினைவுப்படுத்தி சொல்லமுடியவில்லை. அவருடைய செல்பேசியை எடுத்து தெரிந்தவர்களிடம் சொல்லலாம் என்றால், போனை பாஸ்வேர்ட் கொடுத்து லாக் செய்திருக்கிறார். :(
கொஞ்சம் நினைவு தெரிந்ததும், மலங்க மலங்க விழித்தார். இந்தாங்க உங்க வண்டி சாவி என்றால், இது என் வண்டியில்லை என்கிறார். 15நிமிடத்தில் 108 வந்துவிட்டது. இனி அவர்கள் பார்த்துகொள்வார்கள் என கிளம்பிவிட்டேன்.
வலிப்பு நோய் இருப்பவர்கள் வண்டி ஓட்டக்கூடாது. என் நண்பனின் நண்பன் வடிவேலன் என்பவருக்கு இதே மாதிரி வலிப்பு வரும். அவருடைய ஆலைக்கு பேருந்து வசதி இல்லாததால், வண்டியில் தான் மெதுவாக போய்வருகிறார். நண்பர்கள் எவ்வள்வு சொன்னாலும், கேட்க மறுக்கிறார். ரிஸ்க் தெரிந்தே ஓட்டுகிறார்கள். சிரமம் தான்

3 comments:
இப்படி உள்ளவர்கள் வண்டி ஓட்டுவது தவறு... எப்போதும் ஆபத்து தான்...
மொபைலில் பாஸ்வேர்ட் கொடுப்பது நல்லது என்றாலும் ஆபத்து நேரத்தில் உதவமறுக்கிறது.
மிக அருமையான பதிவு
Post a Comment