Friday, October 25, 2013

சாப்பாட்டு நேர சிந்தனைகள்!

ஒரு புதிய பகுதிக்கு சென்றால் ஒன்றுக்கு மூவரை கேட்டுவிட்டுத்தான் உணவகத்துக்கு செல்கிறேன்.  ஆனால், பல சமயங்களில் சுமாராக தான் இருக்கிறது.  இதுவே சுமார் என்றால், மற்ற உணவகங்களின் நிலை? நினைத்தாலே பயமாக இருக்கிறது.

சாப்பிடும் பொழுது சுவைத்து, நன்றாக மென்று சாப்பிட சொல்கிறார்கள். கிடைக்கிற சாப்பாடெல்லாம் ரெம்ப சுமாராக இருக்கும் பொழுது இது எப்படி சாத்தியமாகும்? நீங்களெல்லாம எப்படி சமாளிக்கிறீர்கள்?

பொரியலோ/ கூட்டோ மறுமுறை கேட்கும் பொழுது முதல்முறை வைத்ததை விட அதிகமாகவே தருகிறார்கள்.  இவனுக்கு பிடிச்சுப் போச்சு. இனி அடிக்கடி தொந்தரவு செய்வான் என்ற எண்ணமா?   அல்லது நம்ம பொரியலையும்/கூட்டையும் விரும்பி சாப்பிடறானே! இவன் ரெம்ப நல்லவன்டா! என நினைக்கிறார்களா!  :)

உணவகங்களில் அடிக்கடி விலை பட்டியலை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.  கேட்டால் விலைவாசி கூடுகிறது என பதில் சொல்கிறார்கள்.  ஆனால், சம்பளம் மட்டும் கூடவே மாட்டேன் என்கிறதே! :(

சாப்பிடும் பொழுது சாப்பாட்டை மட்டும் பார்த்து சாப்பிடவேண்டும் என ஜென் தத்துவம் சொல்கிறது!  ஆனால், சாப்பாட்டில் கைவைத்தால், ஏகப்பட்ட சிந்தனைகள் வந்து தொந்தரவு செய்கின்றன. " மருந்து குடிக்கும் பொழுது, குரங்கை நினைக்காதே!" பழமொழி நினைவுக்கு வருகிறது!

நல்ல உணவகங்கள் அரிதாக இருப்பதால், சில பதிவர்களை போல வருங்காலங்களில் நான் அறிந்த உணவகங்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என நினைத்து இருக்கிறேன்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு முடிவு... நீங்களும் ஆரம்பியுங்கள்... வாழ்த்துக்கள்...

Unknown said...

நல்ல முடிவு ,வாழ்த்துக்கள்.

thiyagarajan said...

ஊர் வாரியாக நல்ல உணவகங்கள் ..... ஒரு தொகுப்பாக வெளியிட்டால் எல்லோருக்கும் பயனாக இருக்கும்.

Unknown said...

ஊர் வாரியாக நல்ல உணவகங்கள் ..... ஒரு தொகுப்பாக வெளியிட்டால் எல்லோருக்கும் பயனாக இருக்கும்.