Monday, June 4, 2007

நீயும் (சிலந்தி) வலையும் - கவிதை

உன் பிம்பம் விழுந்தே
கணிப்பொறி
திணறும்

ஏதோ கிறுக்குவாய்
புரியாமல் போனாலும்
'ஆகா!
கவிஞர் ஜனித்துவிட்டார்'
புகழ்வார்கள்

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு
அறிவு பற்றாது என்பார்கள்

பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்

நாளடைவில் - நீயும்
பழகிப்போவாய்

காக்கைக்கூட
கவனிக்காது

உலகமே
உன்னை
கவனிப்பதாய்
பிரமை கொள்வாய்

மாறி மாறி
சொறிந்து கொள்வதில்
நகங்களில்
ரத்தம் வடியும்

காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்

இறுதியில்

கைத்தட்டல்கள்
உன் மனதில்
எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்

தனியறையில்
நீ மட்டும்
சிரித்துக்கொண்டே
இருப்பாய்

10 comments:

Priya said...

என்ன சொல்ல வர்ரீங்க...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு... புரியாத மாறியும் இருக்கு... குழப்பமா இருக்கு!!!

குமரன் said...

வைரமுத்து ஸ்டைலில்..

காதலித்துப்பார்!
சொர்க்கமோ
நரகமோ
இரண்டில் ஒன்று
மண்ணிலேயே நிச்சயம்!

- என்ற கவிதையின் சாயலில்...

இவ்வளவு எளிமையாய் நான் எழுதியது புரியவில்லை என்கிறீர்கள்.

வலையுலகில், புரிந்துவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுகிறவர்களை என்ன செய்வது?

தயவு செய்து, என்ன புரிந்து கொண்டீர்கள் என்ன சொல்லுங்கள்?

Anonymous said...

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு

///

:)

Priya said...

மொத்ததுல ரொம்ப நொந்து போய் இருக்கீங்கன்னு புரியுது...

ஆமாம் அப்படி என்ன ஆச்சு உங்களுக்கு??? வலைள???

Priya said...

திரும்ப படிச்சேன் இப்போ நல்லா புரியுது...

ரொம்ப நொந்த மாறி தெறியுது!!!

Anonymous said...

என்ன ஆச்சு நொந்தகுமாரா? ஆளையே காணோம். நொந்துபோய், ஏதும் விபரீதமா நடந்துருக்குமோ என நினைத்தேன்.நீ இல்லாம நிறைய பேருக்கு குளிர்விட்டு போச்சுப்பா! இனிமேலாவது, அடிக்கடி வருவல்ல!

நாமக்கல் சிபி said...

இந்த கவிதை நல்லா இருக்கே!

குமரன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி சிபி.

நான் நொந்து போனதைப் பற்றி, ஏதும் கருத்து சொல்லலையே!

சேதுக்கரசி said...

//பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்//

:)

குமரன் said...

ஸ்மைல் பண்ணிட்டு போனால், நான் என்னன்னு புரிஞ்சிக்கிறது? உங்க கருத்தச் சொல்லுங்க சேதுக்கரசி!