Wednesday, April 16, 2008

காருக்கு ஒரு நீதி: பைக்குக்கு ஒரு நீதியா?




தமிழ்நாட்டில் பைக் ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்து செல்பவர்கள் 'கட்டாயம் ஹெல்மெட்' அணிய வேண்டும் என சட்டம் போட்டார்கள்.

இப்பொழுதெல்லாம், வேறு ஏதும் சோதனை செய்வதில்லை. ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க எளிதாக இருப்பதால், தெருவுக்கு தெரு நின்று காவல்துறையினர் சிக்கியவரை ரூ. 50, ரூ. 100 என கல்லா கட்டுகிறார்கள்.

லஞ்சம் பெருகியுள்ள நாட்டில் மக்கள் நலன் காக்க போடுகிற சட்டங்கள், அந்த மக்களுக்கு எதிராகத்தான் வேலை செய்யும் என்பது நிதர்சனம்.

தென்மாவட்டங்களில் ஹெல்மெட்டெல்லாம் ஒருவரும் அணிவதில்லை. காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லையாம். நண்பர்கள் சொன்னார்கள்.
டிராபிக் இராமசாமி சென்னையில் மட்டும் இருப்பது தான் காரணமாக இருக்கலாம்.

இந்த செய்தியை எல்லோரும் தெரிந்திருப்பார்கள். நான் சொல்ல வந்த செய்தி வேறு.

கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு பிறகு, கார்களில் கிரிமினல் குற்றங்கள் நிறைய நடப்பதால், 'சன் கண்ட்ரோல் பிலிம்' ஒட்டக்கூடாது என்றொரு சட்டம் போட்டார்கள்.

அதற்கு பிறகு தொடர்ச்சியாய் கவனிக்கிறேன். பல கார்களில் பிலிம் ஒட்டப்பட்டு சுதந்திரமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.

நான் கவனித்த வரையில், பைக்கை தெருவுக்கு தெரு நிறுத்தி, கல்லா கட்டுபவர்கள் ஏன் காரை நிறுத்தி கல்லா கட்டுவதில்லை.

இதனால், எனக்கு சில சந்தேகங்கள் வருகின்றன

1. இந்த சட்டம் வாபஸ் ஆகிவிட்டதா? அல்லது

2. திருட்டு சி.டி விற்பவர்கள், டாஸ்மார்க் பார் நடத்துபவர்கள், கஞ்சாவிற்பவர்கள் மாதந்தோறும் அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு மாதம் மாதம் மாமூல் கொடுப்பது மாதிரி, கார்களை வைத்து கிரிமினல் தொழில் செய்பவர்கள் மாமூல் கொடுக்கிறார்களா? அல்லது

3. கார் வைத்திருப்பவர்கள் சமூகத்தில் பெரிய மனிதர்கள். அவர்கள் என்னதான் தவறு செய்தாலும், மதிப்புடன் நடத்தவேண்டும் என நினைக்கிறதா?

உங்களுக்கும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பகிர்ந்து கொள்ளுங்கள்

8 comments:

Anonymous said...

?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
குமரன் said...

"attention: see here"- nenos

- இப்படி ஒரு பின்னூட்டம் வந்தது. அதைக் கிளிக் செய்தால், உன் கணிப்பொறி வைரஸ் அட்டாக் ஆயிருச்சு!

அதை சரி செய்யனும்னா, இதை டவுன் லோட் செய்-னு ஒரு பில்லை போட்டானுக.

இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்காங்கன்னு தெரியல!

மக்களே உஷார்!

பிரேம்ஜி said...

எனக்கும் இது மாதிரி ஒரு பின்னூட்டம் வந்தது.

யாத்ரீகன் said...

மக்களாகியா நம்ம எப்போ ௫0 ரூபாய் இலஞ்சம் கொடுக்க தயார் ஆகுறோமோ அப்போ நம்மையும் தானே குற்றம் சொல்லணும் .. விஜிலன்ஸ் தொலைபேசி எண் எங்கேயோ பார்த்த நியாபகம் .. உடனே கூப்பிட்டு சொல்ல முடியணும் அப்போ தான் கொஞ்சம் குறையும் .. நம்ம வேலையை பார்க்க நாம எப்படி வேணும்னாலும் வளைந்து குடுக்க தயார்னு எண்ணம் போலிசுக்கு இருக்குறதால தான் இது . .

Anonymous said...

I don't understand how you can match the Biker's Helmet rule & Car's Suncontrol film rule. The Helmet rule for Bikers are for their saftey and SCF rule is for the proposed prevention of criminal issues. Actually if you remove the SCF from cars more power and time is needed for the A/C to keep the temprature better in a car. Due to the high tempratures prevailing in Tamil Nadu if it has to be strictly enforced then there will be a lot of petrol wastage and it leads to criminal waste of petrol ( added to what normally car does). So its better not to remove the SCF, but enforce the UV radiation % to be more and the sunlight filtering % to be less, I mean less transparent. This would make sense, but taking it altogather is totally wrong and unnecessary.

குமரன் said...

"நம்ம வேலையை பார்க்க நாம எப்படி வேணும்னாலும் வளைந்து குடுக்க தயார்னு எண்ணம் போலிசுக்கு இருக்குறதால தான் இது . ."

யாத்திரீகன்,

வளைந்து கொடுக்காமல், என் வேலை பறிபோன நொந்த அனுபவம் சொல்லட்டுமா!

எனக்கு ரேசன் கார்டு வாங்கனும்னு அப்ளை செய்து... 200 ரூபாய் பணம் கொடுத்தால், முடிய வேண்டிய வேலை...

7 பர்மிசன், 2 அரை நாள் லீவு ன்னு விசேசமாக இதற்கு அலைந்து... கம்பெனிக்கும், எனக்கும் பிரச்சனை ஆகி, வேலைய விட்டேன்.

கார்டு கைக்கு வரும் பொழுது, இரண்டு வீடுகள் மாறிவிட்டேன். இப்பொழுது, வங்கி கணக்கு துவக்கத்திற்க்காக, என்னுடைய இப்பொழுது உள்ள முகவரியை, ரேசன் கார்டில் மாற்ற அலைய வேண்டும்.

நினைக்கும் பொழுதே கண்ணக்கட்டுது. இப்ப பார்க்கிற வேலைய நினைச்சா கவலை வருது.

என் நண்பன் ஒரு ஆண்டுக்கு முன்பு, அரசு வேலையில் சேர்ந்தான். சேர்ந்த முதல் வாரத்திலிருந்து, தினம் 300 லஞ்சப்பணத்தில் அவருக்கான பங்கு பணம் தர தயாராக இருந்தார்கள்.

நொந்தகுமாரன் நண்பன் எப்படி இருப்பான்? இன்றைக்கும் வாங்காமல் வேலை செய்கிறான்.

அவன் நாளை காலையில் முடிவு செய்து, வாங்க ஆரம்பித்தால், வாங்கியது தான்.

நான் சொல்லவருவது, இந்த சிஸ்டம் லஞ்சம் வாங்குவதற்காகவே உருவாக்கப்பட்டது.

மக்களை குறை சொன்னால், நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

குமரன் said...

அனானி அவர்களே!

ஏன் ஒப்பிடுகிறீர்கள் என்கிறீர்கள்?

சாலையில் ஓடுகிற இரண்டு வகையான வாகனங்களுக்கான சட்டம். ஆனால், ஒன்றை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

இன்னொன்றை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். அதனால் தான் ஒப்பிட்டேன்.

பிறகு,

பிலிம் ஒட்டினால், ஏசி நிற்கும். பெட்ரோல் மிச்சமாகும் என்கிறீர்கள்.

அதெல்லாம், ஆள் கடத்தல், பாலியல் பலாத்காரம் இல்லாத ஊரில் மிச்சப்படுத்தட்டும்.

தற்போதைக்கு, கிரிமினல் குற்றங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைப் பற்றி சிந்திப்போம்.