Saturday, November 12, 2011

ஏ.டி.எம் அட்டை- சில குறிப்புகள்!


ரூ. 500 என எண்களை அழுத்தியதும், கட கடவென தாள்களை எண்ணி, லட்சக்கணக்கில் கொட்டப்போவது போல ஆசைக்காட்டி, ஒரே ஒரு தாளை வெளியே தள்ளுகிறது!

****

பர்சை திறக்கும் பொழுதெல்லாம், நாலு டெபிட் கார்டு, ஒரு கிரடிட் கார்டு கண்டு, வசதியுள்ளவனாக அவர்களாகவே நினைத்துக்கொண்டு, கடனும் கேட்டுவிடுகிறார்கள். எல்லாவற்றிலும் மினிமம் பேலன்ஸை விட குறைவாக இருப்பது எனக்கு தானே தெரியும்!

****

மாத இறுதியில் செலவுக்கு பிரச்சனையாகி, மினிமம் பேலன்ஸில் இருந்து ரூ. 200 எடுக்க வரிசையில் நிற்கும்பொழுது, "அதிகபட்சமாக நாப்பதாயிரம் மட்டும் தான் எடுக்க அனுமதிக்கிறார்கள்" என பக்கத்தில் நிற்பவர்கள் அலுத்துக்கொள்கிறார்கள்.

****

5வயது அண்ணன் பையனை ஏடிஎம்-ல் பணம் எடுக்க சிலமுறை அழைத்துப்போயிருக்கிறேன். எதையாவது பெரிதாய் வாங்கிதர கேட்கிறான். பணம் இல்லையென சொன்னால், "வா! அந்த மெஷினிடம் போய் பணம் கேட்கலாம்!" என்கிறான். பணம் நம் கணக்கில் இருந்தால் தான், எடுக்கமுடியும் என்பதை அவனுக்கு எப்படி புரியவைப்பது?

****

ஏடிஎம் முக்கியமான தருணங்களில் காலை வாரிவிட்டுவிடுகிறது. அன்றைக்கு அவசரத்திற்கு, தென்காசியில் பணம் வேண்டி நின்றால், பணம் டெபிட்டாகி, பணம் வரவில்லை. ஊருக்கு வந்து ஒரு வாரம் கழித்து, பணத்தை என் கணக்கில் வரவு வைத்தார்கள்.

இன்னொருமுறை, மருத்துவமனைக்கு பணம் கட்டவேண்டும் என பணம் எடுக்கப் போனால், பணம் வரும் சமயம் நெட் வொர்க் பெயிலாகி, கார்டு உள்ளேயே மாட்டிக்கொண்டுவிட்டது.

****

4 comments:

ப.கந்தசாமி said...

நொந்த குமாரனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். என்னால் முடிந்த உதவி அவ்வளவுதான்.

குமரன் said...

அனுதாபங்கள் சொல்வது எவ்வளவு ஆறுதலான விசயம் தெரியுங்களா! நன்றி.

Thalapolvaruma said...

நல்லா சொன்னீக atmல் பணமே இல்லாவிட்டாலும் சும்மா சீன் போட வேணுமே...

Unknown said...

Pavam neenga ! Enaku ATM USE Pannave theriyathu! Etho ungaluku oru + vote