கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Wednesday, July 17, 2013
Friday, July 12, 2013
'குடி'காரியின் கதை!
Smashed - 2012 - ஒரு காதல் படம் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் டிவிடி விற்பவரிடம் கேட்டதற்கு இந்த படத்தை தந்தார். ஆனால், இது காதல் படமில்லை!
கணவன் மனைவி இருவரும் அமெரிக்க இளம்தம்பதியினர். இருவரும் மொடா குடிகாரர்கள். அவள் ஒரு ஆரம்ப பள்ளியில் ஆசிரியை. பாடம் சொல்லிக்கொடுக்கும் அழகே அழகு! அன்றைக்கு காலையிலேயே சரக்கை இறக்கிவிட்டு, பள்ளியில் பாடம் நடத்தும் பொழுது, வாந்தி எடுக்கிறாள். பிள்ளைகளும், தலைமை ஆசிரியை எல்லொரும் கர்ப்பமா என கேட்கும் பொழுது, தற்காலிகமாக தப்பிக்க ஆமாம் என்கிறாள். உண்மையை அறிந்து சக ஆண் ஆசிரியரோ 'நிறைய குடிக்காதே' என ஆலோசனை சொல்கிறார்.
அடுத்தடுத்து, இரண்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒன்று. பாரில் குடித்துவிட்டு வீட்டுக்கு தனியாக போகும் பொழுது, ஒருத்தி லிப்ட் கேட்க அவளையும் அழைத்து செல்கிறாள். அவள் ஹெராயின் தர, அதையும் முதல் முறை இழுக்கிறாள். காலையில் யாருமில்லாத ஒரு இடத்தில் தனியாக தூங்கி எழுகிறாள். சத்தமில்லாமல் காரை எடுத்து, வீடு வந்து சேர்கிறாள்.
இன்னொரு சம்பவம். இரவு 2.30 மணிக்கு தூக்கம் வராமல், வீட்டில் தேடினால் சரக்கும் இல்லாமல், அரை போதையோடு, கடைக்கு போகிறாள். கடைக்காரனோ நேரம் கடந்துவிட்டது. தரமுடியாது. கொடுத்தால், என் வேலை போய்விடும் என்கிறான். அவளோ சரக்கு வேண்டும் என்பதில் அடம்பிடிக்கிறாள். திடீரென்று, ஒன் பாத்ரூம் வர, கடையின் ரெஸ்ட் ரூம் பூட்டிக்கிடக்க, கடையிலேயே போய்விடுகிறாள். கடைக்காரன் செம கடுப்பாகிவிடுகிறான். அதற்கு மேலும் ஒரு ஒயின் பாட்டிலை காசு தராமல் தூக்கிக்கொண்டும் ஓடிவிடுகிறாள்.
சக ஆசிரியர் அவளிடம் பேசி, போதையிலிருந்து மீட்கும் ஒரு குழுவிடம் அழைத்து செல்கிறார். அங்கு வாராவாரம் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அந்த கூட்டங்களில் கலந்துகொள்கிறாள். குடியிலிருந்து மெல்ல மெல்ல விடுபடுகிறாள். தான் கர்ப்பிணி இல்லை என்ற உண்மையை சொல்லிவிடுவோம் என தலைமை ஆசிரியையிடம் சொன்னால், அதிர்ச்சியில் வேலையை விட்டு நீக்கிவிடுகிறாள்.
மன உளைச்சலில் அன்று மீண்டும் தண்ணி அடிக்கிறாள். வீட்டிற்கு போய், புருஷனிடம் "நீ குடிக்கும் வரை நானும் திருந்தமாட்டேன்' என சண்டைபோடுகிறாள். ஒரு சின்ன பார்ட்டி நடக்கிறது. அவள் குடியை விட்டு, ஒரு வருடம் நிறைவு நாள். உற்சாகத்துடன் பேசுகிறாள். இந்த ஒரு வருடத்தில், கணவனை விட்டு பிரிகிறாள். இறுதியில், கணவன் தன்னுடன் வாழ அழைக்கிறான். இவளோ உறுதியாய் மறுத்துவிடுகிறாள்.
*****
மொத்தப் படமும் நாயகியை மையப்படுத்தியே நகர்கிறது. இயல்பாக நடித்திருக்கிறார். Final Destionation - பாகம் 3ல் நாயகியாக நடித்தவர். கதையில் ஆழமோ, காட்சிகளில் அழுத்தமோ இல்லாமல் நகருவது பெரிய குறை. படமும் அதனால் பெரிய வெற்றியும் பெறவில்லை. சுமாரான வசூல். படம் கொடுத்த அந்த கடைக்காரன் மட்டும் என் கையில் சிக்கினான் என்றால்.. ஒன்னும் செய்யமுடியாது. :( இந்த மாதிரி விழிப்புணர்வு படங்களுக்கு கிடைக்கும் விருதுகள் இந்த படத்திற்கும் கிடைத்திருக்கின்றன.
மற்றபடி, இந்த படத்தைப் பற்றி எழுதுவதற்கு காரணம். நமக்கும், இந்த படத்திற்கும் நிறைய நெருக்கம் இருக்கிறது. தமிழ்நாட்டில் 7 கோடியில் 1 கோடி பேர் வரை நன்றாக சரக்கடிக்கிறார்கள். அரசு தெருவுக்கு நாலு கடைகளை திறந்து, வருடம் தோறும் 20 ஆயிரம் கோடிகளுக்கும் மேலாக கல்லா கட்டுகிறது. குடிக்கிற மக்களில் பலர் குடி நோயாளிகளாக, குடி வெறியர்களாக இன்று மாறியிருக்கிறார்கள். கடைகள் திறக்கும் பொழுதே, போதை மீட்பு மையத்தையும் அரசு திறந்திருக்கவேண்டும். அப்படியெல்லாம் சிந்தித்தால், கடைகளையே அரசு திறந்திருக்காதே!
எனக்கு தெரிந்து ஒரு குடும்பத்தில், அப்பா நிறைய சரக்கடிக்கிறார் என அதை நிறுத்த, தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரத்தை பார்த்து, குடிகாரர் அறியாமலே, அவர் உணவில் கலந்து தருவது என்பதை வாங்கி தந்து கொடுத்துள்ளார்கள். விளைவு இப்பொழுது அரைப் பைத்திய நிலையில் அவர் இருக்கிறார்.
இப்பொழுதே போதையில் தள்ளாடுகிறது தமிழகம். வருங்காலம்?

Friday, July 5, 2013
இளவரசனின் மரணம் எழுப்பும் கேள்வி!
வயது வந்த ஒரு பையனும், ஒரு பெண்ணும் தான் விரும்பியபடி திருமணம் செய்வதில் எத்தனை சிரமங்களை ஒரு பிற்போக்கு சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது! தமிழனாகிய ஒருவரும் தலைகுனிய வேண்டிய அவமானம் இது!
அப்பாவின் இறப்பின் பொழுது சடங்குகள் செய்ய மறுத்த பொழுது, சித்தப்பா ஒருவர் எனக்கு விவரம் தெரிந்து, "கடந்த 25 ஆண்டுகளாக இப்படி யாரும் சடங்கு செய்ய மறுத்ததில்லை" என தன் எதிர்ப்பை கோபமாய் கேட்டார். ஒருபக்கம் நாம் போராடுகிறோமே என என்னளவில் சந்தோசம். மறுபக்கம் 25 ஆண்டுகளாக யாரும் போராடவில்லையே என்ற வருத்தம் வந்தது.
நிறைய பதிவுகள். வருத்தங்கள். சரிதான். இளவரசனின் மரணத்திற்கு உண்மையிலேயே வருந்தினால், சாதியற்ற சமூகம் உருவாவதற்கு இதுவரை சமூகத்திலோ, தன்னளவிலோ என்ன செய்துவிட்டோம் என நம்மை நாமே உரசிப்பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு சாதியில் திருமணம் செய்துகொண்டு, எல்லாவித சாதி, சடங்கு சம்பிரதாயங்களையும் செய்துகொண்டு, சாதிய சமூகத்தில் நாமும் ஒரு அங்கமாய் இருந்துகொண்டு, எப்படி இளவரசனின் மரணத்திற்கு வருந்துவது! இது ஒரு முரண்பாடு!
அதேபோல, தனிநபர்களாக இருந்துகொண்டு, எது ஒன்றையும் சாதிக்கமுடியாது என்பதும் உண்மை. தான் சரியென நினைக்கும் ஏதாவது ஒரு முற்போக்கு அமைப்பில் சேர்ந்து இயங்கவேண்டும். அது தரும் பொறுப்பான வேலைகளை இழப்புகளை தாங்கிகொண்டு களத்தில் பணியாற்ற வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல், தனிநபர்களாக இருந்துகொண்டு என்ன செய்யமுடியும் என்றால், முகநூலில் வன்னிய சாதி வெறியர்களின் முகத்தில் மீது கற்பனையாக ஒரு குத்து குத்தலாம். அதிகபட்சமாக வார்த்தைகளில் கொலைவெறியோடு ராமதாஸை தூக்கில் போடலாம்! நடைமுறையில் ஒன்றையும் சாதிக்கமுடியாது!

Monday, July 1, 2013
சமூக அக்கறை கொண்ட மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்!
எங்கள்
பகுதியில் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர் இருக்கிறார். அவருடைய சிறப்பு
நோயை சரியாக கண்டறிவது! பல மருத்துவர்கள் இதில் தான் சோடை போகிறார்கள். 4
ஆண்டுகளுக்கு முன்பு, ரூ. 150 வாங்கியவர், இப்பொழுது ரூ. 200
வாங்குகிறார். இடையில் 6 மாதங்களாக போய் பார்க்கவில்லை. இப்பொழுது விலைவாசி
ஏற்றத்தினால், ரூ. 250 வாங்கலாம்.
ஏன் இவ்வளவு வாங்குகிறார் என விசாரிக்கும் பொழுது, ஒரு நாளைக்கு 100 நோயாளிகளை பார்க்கிறார். கூட்டத்தை குறைப்பதற்காக என்கிறார்கள்.
இதே மருத்துவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, அருகே உள்ள வேறு பகுதியில் ரூ. 2
வாங்கி பல ஆண்டுகளாக பெருங் மக்கள் கூட்டத்திற்கு ஓய்வு இல்லாமல்
மருத்துவம் பார்த்திருக்கிறார்.
ஏன் இந்த தலைகீழ் மாற்றம். அவரை
கொஞ்சம் பேசவைத்தால், ஒரு நல்ல செய்தி சமூகத்திற்கு கிடைக்கும். நானே
நேரிடையாய் கேட்டுவிடுவேன். ஆனால், அவர் பேசுவது ரெம்பவும் சொற்பமான
வார்த்தைகள் மட்டுமே! இப்பொழுது மருத்துவர்கள் பலரும் பேசுவதே இல்லை.
பேசினால், இரண்டு நோயாளிகளை பார்க்கும் நேரம் பாதிக்கும் என்ற கண்ணோட்டமாய்
இருக்கலாம்.
வரலாற்றில் கனடாவை சேர்ந்த நார்மன் பெத்யூன், இந்திய
மருத்துவர் துவாரகநாத் போன்ற பல சமூக அக்கறை கொண்ட மருத்துவர்கள்
புரட்சிகர இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு கடுமையாக பணியாற்றி
இருக்கிறார்கள். இப்பொழுது எண்ணிக்கையில் குறைந்தாலும், சமூகத்தில்
இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு நமது வாழ்த்துக்களை பகிர்வோம்!
Subscribe to:
Posts (Atom)
பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப்போய் தான் “வலையுலகமும் நொந்தகுமாரனும்” என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுத துவங்கினேன்.
என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். என்னோட விக்கிபீடியா வினவு தான். ஏதாவது சந்தேகம் வந்தால், வினவில் தான் தேடிப்படிக்கிறேன். ஒருவேளை இல்லையென்றால் தான் வேறு தளத்திற்கு நகர்கிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வினவின் குழுவில் சில புதியவர்கள் இணைந்துள்ளதை கவனிக்கிறேன். பருண்மையாகவும், ரசனையாகவும் எழுதுகிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
புதியவர்களை மனதில் கொண்டு, கேள்வி பதில், மார்க்சிய லெனினிய கல்வி குறித்தும் எழுதுங்கள். முன்பெல்லாம் சனிக்கிழமைகளில் கவிதைகள் வெளியிடுவீர்கள். பிறகு நிறுத்திவிட்டீர்கள். அதை மீண்டும் துவங்கி, இளம் கவிஞர்களை எழுத உற்சாகப்படுத்தவேண்டும். முக்கிய கட்டுரைகளுக்கு கார்ட்டூன் இணைக்க வேண்டும். அதை முகப்பில் தெரியும் படி செய்யலாம்.
ம.க.இ.க வெளியீடான ஒலிப்பேழையில் நிறைய பாடல்களை கேட்டிருக்கிறேன். அதிலிருந்து பெற்ற உணர்வுகள் அதிகம். புதியவர்களுக்கு அறிமுகப்படுத்த அதில் உள்ள முக்கிய பாடல்களை மாதம் இரண்டு பாடல்கள் என இணைக்கலாம்.
தோழர் மருதையன் எழுதிய கட்டுரைகளை அவ்வப்பொழுது இணைப்பது போல அவருடைய உரைகளை அவ்வப்பொழுது இணைக்கலாம்.
பல பத்திரிக்கைகள் இளைஞர் மலர்,சிறுவர் மலர், பெண்கள் மலர், அறிவியல் மலர் என நடத்துவது போல வினவும் பல்வேறு பிரிவினருக்காக கவனம் கொண்டு கட்டுரைகள் வெளியிடவேண்டும். அதற்காக வினவு குழுவ கட்டுரைகள் எழுதவேண்டும் என்பதில்லை. இணையத்தில் பல்வேறு துறை சார்ந்த நபர்கள் நிறைய எழுதுகிறார்கள். அதிலிருந்து தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
வருங்காலத்தில் வினவு குழுவில் நானும் இணைவதற்காக தான் தப்போ, சரியோ, எத்தனை சொந்த வேலைகள் இருந்தாலும், சமூக ரீதியான விசயங்களை வாரம் ஒரு கட்டுரை என்ற அடிப்படையில் எழுதி வருகிறேன்.
இப்பொழுது கூட சின்ன சின்ன அசைன்மென்ட் ஏதாவது இருந்தால் தாருங்கள். சந்தோசமாய் செய்கிறேன்.
சமூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்,
(சந்தோஷ) குமரன்