Wednesday, July 1, 2009

அழியும் ஈழத்தமினமும், அரட்டை சட்டமன்றமும்!


ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து... சட்டமன்றத்தில் நேற்று பேச்சுவார்த்தை தொடங்கியதும்... அதிமுககாரர்கள் "காப்பாற்று! காப்பாற்று! ஈழத்தமிழர்களை காப்பாற்று!" என முழக்கமிட்டுள்ளனர். அமைதியாக இருக்க வலியுறுத்தி... கேட்காமல் போனதால்... வெளியேற்றிவிட்டார்கள். உடன் மதிமுககாரர்களும்.

"காப்பாற்று! காப்பாற்று!" என்றால் யாரை காப்பாற்றுவது என காங்கிரசு எம்.எல்.ஏ. சுதர்சனம் கிண்டலடித்திருக்கிறார்.

சிபிஎம் காரர்கள் பேச எழுந்ததும்... கம்யூனிஸ்டுகள் பேசி பேசித்தான் வீணாக போய்விட்டனர் என திமுகவில் யாரோ கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

சிறிது நேரத்தில்... பாமகவும் வெளியேறிவிட்டதாம். பீட்டர் அல்போன்ஸ் அதிமுக ஆட்சிக் காலத்தில் நான் வேட்டியை கட்ட முடியவில்லை. பேன்ட் போட்டுத்தான் வந்தேன் என நீண்ட லெக்சர் அடித்திருக்கிறார்.

ஈழ விவகாரத்தில்.. ஏதாவது உருப்படியாக விவாதிப்பார்கள் என்று தினமலர் செய்தியை படித்துப் பார்த்தால்... ஒரு விசயமும் விவாதிக்கப்படவில்லை. ஈழத்தமிழர்களை காப்பாற்ற எந்த தீர்மானமுமில்லை. இந்த சட்டமன்றம் மீண்டும் அரட்டை மடம் என நிருபணமாகியிருக்கிறது.

பின்குறிப்பு : ஈழத்திலிருந்து கிளம்பிய ஒரு ஆவி.. தமிழக தலைவர்கள் மிஞ்சியிருக்கும் தனது ஈழ சொந்தங்களை காப்பாற்றுவார்கள் என நம்பி... நேற்று பார்வையாளர்கள் பகுதியில் ஆர்வத்துடன் கவனித்தது. நடந்த கூத்தைப் பார்த்து... மீண்டும் ஒருமுறை தற்கொலை செய்துகொண்டது.

6 comments:

kalagam said...

செம அடி, செருப்படி

ஆவிக்கு இது தேவைதான். செத்த பிறகாவது சூடு சொரணை வேண்டாமா?

இந்த அயோக்கியர்களை நம்பியதுக்கு ...............


கலகம்

தமிழினி said...

ஏதும் முயற்சித்து இருப்பார்களே ஆவிகளை வைத்து அரசியல் செய்ய.....
எப்படி விட்டு வைத்தார்கள்

தமிழினி said...

ஏதும் முயற்சித்து இருப்பார்களே ஆவிகளை வைத்து அரசியல் செய்ய.....
எப்படி விட்டு வைத்தார்கள்

தமிழினி said...

ஏதும் முயற்சித்து இருப்பார்களே ஆவிகளை வைத்து அரசியல் செய்ய.....
எப்படி விட்டு வைத்தார்கள்

தமிழினி said...

ஏதும் முயற்சித்து இருப்பார்களே ஆவிகளை வைத்து அரசியல் செய்ய.....
எப்படி விட்டு வைத்தார்கள்

தமிழினி said...

ஏதும் முயற்சித்து இருப்பார்களே ஆவிகளை வைத்து அரசியல் செய்ய.....எப்படி விட்டு வைத்தார்கள்