
பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல ப

இந்த நாட்களில் தான் 'வினவு' அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.
என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். சமூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.
சில ஆலோசனைகள் :
வினவு-ல் துவக்க காலங்களில் பண்பாட்டுத் தளத்தில் நிறைய கட்டுரைகள் வெளிவந்து, நிறைய வரவேற்பு பெற்றது. தொடர வேண்டும்
மருத்துவர் ருத்ரன் துவங்கிய தொடரை வெற்றிகரமாக தொடர வேண்டும். மருத்துவர் ருத்ரன் போன்ற பல துறை சார்ந்த சமூக அக்கறை கொண்ட பதிவர்கள் தனித்தனியாக எழுதுகிறார்கள். அவர்களையும் எழுத வைக்க வினவு முயற்சிக்க வேண்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம். சமூக மாற்றம் நிச்சயம் வரும்.
வளர்ச்சிப் பணிகளுக்காக, நண்பர்களிடம் நன்கொடை கேட்டு வாங்கித்தர முயல்கிறேன்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்,
சந்தோச குமாரன். (இந்த பதிவுக்கு மட்டும்)
4 comments:
வினவு தளத்தில் தொடர முடியாமல் போனது என் சோம்பலால்தான். எழுதுகிறேன்
நன்றி தோழர் நொந்த குமாரன்,
வினவு
ருத்ரன் அவர்களுக்கு,
உங்களைப் போன்ற சமூக அக்கறை கொண்டவர்கள் சமூகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
உங்கள் மருத்துவமனைக்கு நண்பர் ஒருவருடன் நானே வந்திருக்கிறேன்.
எவ்வளவு கூட்டம்! வேலை சுமை இருந்தாலும், வலைத்தளங்களில் எழுதுகிறீர்கள். நல்ல பதிவுகளில் உற்சாகப்படுத்தி பின்னூட்டமிடுகிறீர்கள்.
நீங்கள் எழுத வெண்டும். காத்திருக்கிறோம்.
வருகை தந்த வினவிற்கு நன்றி.
Post a Comment