உணவகத்தில் பணம் கொடுத்து டோக்கன் வாங்கி தான் சாப்பிட வேண்டும் என் ஏன் கொண்டுவந்தார்கள். சாப்பிட்டு விட்டு பணம் இல்லை என்று கைவிரித்துவிடக்கூடாது என்பதற்காகவா? :)
'பசியோடு அமர்ந்து பசியோடு எழு' என்கிறார்கள். சுவையான உணவு என்றால், இதை மறந்து போகிறோமே! ஏன்? :)
குழம்பு வகைகள் நன்றாக செய்ய செய்ய தெரிந்தவர்களுக்கு சுவையான ரசம் வைக்க தெரியாது. சுவையாக ரசம் வைக்க தெரிந்தவர்களுக்கு குழம்பு வகைகள் செய்ய தெரியாது என்கிறார்கள். இரண்டுமே சரியாக வைக்க தெரியாதவர்கள் பற்றி பேச்சே இல்லை. என் அனுபவத்தில் இதை சரியென்றே உணர்கிறேன். உங்கள் அனுபவம் என்ன?
வயிற்றுக்கு பற்கள் கிடையாது. அதனால், எதை தின்றாலும் மென்று தான் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். ஆனால், எங்க அண்ணன் அரிசி சோற்றை மென்று சாப்பிடக்கூடாது என்கிறார். எது சரி?
சாப்பிட உடனே தண்ணீர் அருந்த கூடாது. அது செரிக்க தயாராய் இருக்கும் அமிலத்தை நீர்த்து போகவைத்துவிடும் என்கிறார்கள். அதனால், அரைமணிநேரம் கழித்து உடலே நீர் கேட்கும். அப்பொழுது குடியுங்கள் என்கிறார்கள். சரியா?
நாகர்கோவில், கன்னியாகுமரிகாரர்களுக்கு காரக்குழம்பு வைக்க தெரியாது. அதற்கு அங்கு அதிகம் விளையும் தேங்காயும் ஒரு காரணம் என்கிறார்கள். உண்மையா? என் அனுபவத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி சாப்பாடு சவ சவ என்று தான் இருக்கும்!
சாப்பிடும் பொழுது வாய் திறந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் ஆக்சிஜனும் சேர்ந்து உள்ளே போகும். அதனால், சரியான செரிமானம் நடைபெறாது என்கிறார்கள். உண்மையா?
அப்புறம் முக்கியமான் குறிப்பு. இதில் எது ஒன்றையும் சிக்கலாக்கி, எஸ்.எம்.எஸ். அனுப்பி சமூகத்தை கலவரப்படுத்திக்கொள்ளக்கூடாது. நான் உள்ளே போவதற்கு விருப்பம் இல்லை. :)

7 comments:
Hi,
Nice
|| அப்புறம் முக்கியமான் குறிப்பு. இதில் எது ஒன்றையும் சிக்கலாக்கி, எஸ்.எம்.எஸ். அனுப்பி சமூகத்தை கலவரப்படுத்திக்கொள்ளக்கூடாது. நான் உள்ளே போவதற்கு விருப்பம் இல்லை. :) ||
இதுதான் கொலவெறி...
|| உணவகத்தில் பணம் கொடுத்து டோக்கன் வாங்கி தான் சாப்பிட வேண்டும் என் ஏன் கொண்டுவந்தார்கள். சாப்பிட்டு விட்டு பணம் இல்லை என்று கைவிரித்துவிடக்கூடாது என்பதற்காகவா? :) ||
கரெக்ட்
|| 'பசியோடு அமர்ந்து பசியோடு எழு' என்கிறார்கள். சுவையான உணவு என்றால், இதை மறந்து போகிறோமே! ஏன்? :) ||
ஏனென்றால் நாக்குக்கு பூட்டு இல்லை!
|| குழம்பு வகைகள் நன்றாக செய்ய செய்ய தெரிந்தவர்களுக்கு சுவையான ரசம் வைக்க தெரியாது. சுவையாக ரசம் வைக்க தெரிந்தவர்களுக்கு குழம்பு வகைகள் செய்ய தெரியாது என்கிறார்கள். இரண்டுமே சரியாக வைக்க தெரியாதவர்கள் பற்றி பேச்சே இல்லை. என் அனுபவத்தில் இதை சரியென்றே உணர்கிறேன். உங்கள் அனுபவம் என்ன? ||
இல்லை...இரண்டும் அருமையாகச் செய்யத் தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்...சிறந்த,மிகத் தெரிந்த எடுத்துக்காட்டு..அது நான்தான்..
|| வயிற்றுக்கு பற்கள் கிடையாது. அதனால், எதை தின்றாலும் மென்று தான் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். ஆனால், எங்க அண்ணன் அரிசி சோற்றை மென்று சாப்பிடக்கூடாது என்கிறார். எது சரி? ||
ரொம்பத் தவறு..எந்த உணவையும் நன்கு மென்றுதான் உண்ண வேண்டும்.
|| சாப்பிட உடனே தண்ணீர் அருந்த கூடாது. அது செரிக்க தயாராய் இருக்கும் அமிலத்தை நீர்த்து போகவைத்துவிடும் என்கிறார்கள். அதனால், அரைமணிநேரம் கழித்து உடலே நீர் கேட்கும். அப்பொழுது குடியுங்கள் என்கிறார்கள். சரியா? ||
சாப்பிடுவதற்கு முன் ஒரு வாய் மட்டும் அருந்தலாம்; உணவு உண்ட பின்னர் தேவையான அளவு அருந்தலாம்..
|| நாகர்கோவில், கன்னியாகுமரிகாரர்களுக்கு காரக்குழம்பு வைக்க தெரியாது. அதற்கு அங்கு அதிகம் விளையும் தேங்காயும் ஒரு காரணம் என்கிறார்கள். உண்மையா? என் அனுபவத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி சாப்பாடு சவ சவ என்று தான் இருக்கும்! ||
அந்தப் பகுதிகளில் சாப்பிட்டு ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டன.எனவே..நோ கமெண்ட்ஸ்..
|| சாப்பிடும் பொழுது வாய் திறந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் ஆக்சிஜனும் சேர்ந்து உள்ளே போகும். அதனால், சரியான செரிமானம் நடைபெறாது என்கிறார்கள். உண்மையா? ||
வாயைத் திறக்காமல் யாராலும் சாப்பிட முடியும் என்று தெரியவில்லை;அப்படி எந்த டெக்னாலஜியும் இன்னும் வரவில்லை; ஆனாலும் சாப்பாட்டுடன் இன்னொரு முழு முஷ்டிக் கையும் வாய்க்குள் போகும் வண்ணம் வாயைத் திறப்பதில் ஆபத்து இருக்கிறது.
உங்களை நொந்த குமாரனாக்கியதில் என் பதிவின் பங்கும் இருக்கிறதா என்பதை அறிய ஆவல்...
ஹா... ஹா.. நல்ல அலசல் நண்பரே...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
வாழ்த்துக்கள் தெரிவித்த அனானி, ஹரி, தனபாலன் அவர்களுக்கு நன்றி.
அறிவன்,
எல்லா கேள்விகளுக்கும் பதிலை அளித்திருக்கிறீர்கள். நன்றி. எல்லாவகை குழம்புகளையும், ரசத்தையும் அருமையாக வைக்க தெரிந்தால், ஆணாக இருப்பதால் நீங்கள் கண்டிப்பாக லட்சத்தில் ஒருவர் என பெருமைப்பட்டுகொள்ளலாம்.
வாயைத்திறக்காமல் சாப்பிடுவது சாத்தியமில்லை. வாய்க்குள் அனுப்பிய பின், மெல்லும் பொழுது வாயைத் திறக்ககூடாது என்கிறார்கள்.
நான்கு வருடங்களாக வலையுலகில் உலாவுகிறேன். என்னை நொந்தகுமாரன் ஆக்கியதில் பங்கு கொஞ்சம் சீனியர்களுடையது. உங்கள் பதிவுகளை படித்துவிட்டு, நொந்து போகிறேனா என பிறகு பதிலளிக்கிறேன். :)
ஒரு சாப்பாட்டு விசியத்தில் இத்தனை கவலைகளா? குழம்பு வகைகள் நன்றாக செய்ய செய்ய தெரிந்தவர்களுக்கு சுவையான ரசம் வைக்க தெரியாது. சுவையாக ரசம் வைக்க தெரிந்தவர்களுக்கு குழம்பு வகைகள் செய்ய தெரியாது என்கிறார்கள். இரண்டுமே சரியாக வைக்க தெரியாதவர்கள் பற்றி பேச்சே இல்லை. என் அனுபவத்தில் இதை சரியென்றே உணர்கிறேன். உங்கள் அனுபவம் என்ன?
இரண்டுமே நன்றாக வைக்க தெரிந்தவர்கள் தான் அதிகம். உங்களுக்கு அந்த மாதிரி நன்றாக சமையல் தெரிந்தவர்கள் அதிகம் தெரியாது என்று நினைக்கிறன் சரியா?
வயிற்றுக்கு பற்கள் கிடையாது. அதனால், எதை தின்றாலும் மென்று தான் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். ஆனால், எங்க அண்ணன் அரிசி சோற்றை மென்று சாப்பிடக்கூடாது என்கிறார். எது சரி?
எதை சாப்பிட்டாலும் மென்றுதான் சாப்பிட வேண்டும். இரைப்பைக்கு அதிக வேலை தரகூடாது என்று சொல்லுவார்கள்.
சாப்பிட உடனே தண்ணீர் அருந்த கூடாது. அது செரிக்க தயாராய் இருக்கும் அமிலத்தை நீர்த்து போகவைத்துவிடும் என்கிறார்கள். அதனால், அரைமணிநேரம் கழித்து உடலே நீர் கேட்கும். அப்பொழுது குடியுங்கள் என்கிறார்கள். சரியா?
ரொம்ப வே சரி
நாகர்கோவில், கன்னியாகுமரிகாரர்களுக்கு காரக்குழம்பு வைக்க தெரியாது. அதற்கு அங்கு அதிகம் விளையும் தேங்காயும் ஒரு காரணம் என்கிறார்கள். உண்மையா? என் அனுபவத்தில் நாகர்கோவில், கன்னியாகுமரி சாப்பாடு சவ சவ என்று தான் இருக்கும்!
கண்டிப்பாக நாகர்கோவில்காரர்களுக்கு இதை படித்தால் கோபம் வரும். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு சுவை
சாப்பிடும் பொழுது வாய் திறந்து சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் ஆக்சிஜனும் சேர்ந்து உள்ளே போகும். அதனால், சரியான செரிமானம் நடைபெறாது என்கிறார்கள். உண்மையா?
இதுவரை அப்படி எதுவும் கேள்வி படவில்லை.
- மது
மது,
எல்லா கேள்விகளுக்கும் உங்கள் அனுபவத்தில் நன்றாக பதிலளித்திருக்கிறீர்கள். கொஞ்சம் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இன்றைக்கு தான் மெயில் பெட்டியை திறந்தேன்.
நன்றி.
குமரன்
Post a Comment