
உலகம்
சத்தமான இரைச்சலிருந்து
மெல்ல மெல்ல விடுபடும்.
பகல் பொழுதுகள்
பிழைப்புக்கானவை.
இரவு பொழுதுகள்
நமக்கானவை.
எத்தனை விவாதங்கள்
எத்தனை உரையாடல்கள்
எத்தனை நகைச்சுவைகள்
இரவு பொழுதுகளில்!
பட்டிமன்றங்கள்
கலைநிகழ்ச்சிகள்
திரைப்படங்கள்
கோவில் நிகழ்ச்சிகள்
எங்கு எப்பொழுதென்றாலும்
நாங்கள் அங்கிருப்போம்!
ஊர் அடங்கும் பொழுது
ஒரு தேநீர்.
மக்கள் படம் விட்டு வரும்பொழுது
ஒரு தேநீர்.
சப்தநாடியும் அடங்கி
ஊர் அமைதியாய் தூங்கும் பொழுது
ஒரு தேநீர்.
விழிக்கும் பொழுது
அவர்களுடனும் ஒரு தேநீர் என
எங்கள் இரவு அடங்கும்!
ஒரு முழு நீள நாவலை
முழு நீள இரவில்
ஆர்வம் பொங்க படித்த
நினைவுகள் மேலெழும்புகின்றன.
அம்மாவின் குரல்
மணிக்கொருமுறை
அதட்டிக்கொண்டே இருக்கும்.
'இன்னும் தூங்கலையா?'
இளையராஜாவின் இசை
துரைப்பாண்டியின் கவிதை உளறல்கள்
இரவுகளின் சிறப்பு!
வானம் பார்த்து படுத்து
என் நண்பன் ஒருவன்
வானவியலில் ஆர்வம் கொண்டுவிட்டான்.
வானம் பற்றி இரவு முழுக்க
பேச சொன்னாலும் பேசுவான்!
தூங்காநகரத்தின்
செல்லப்பிள்ளைகள் நாங்கள்!
சென்னையில்
பதினொருமணிக்குள்
கூட்டுக்கள் அடங்கிவிடுகிறார்கள்.
இரவு பொழுதுகள்
ருசியானவை!
சென்னையில்
இழப்பது மிகப்பெரிய சோகம்!
6 comments:
சோதனை
Nice
/////அம்மாவின் குரல்
மணிக்கொருமுறை
அதட்டிக்கொண்டே இருக்கும்.
'இன்னும் தூங்கலையா?'///
எங்கும் இதே புராணம் தானா?
நல்லாயிருக்குங்க..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
mm.. missing the same - paalveli
mmmm. missing the same - Paalveli
மதுரை இனிமையான நகரம்.மாறிய மதுரையைப் பார்க்கவேண்டும்.36 வருடங்கள் பெரிய இடைவெளி அல்லவா.
Post a Comment