மெல்லிய பனிபடலம். அதிகாலை வேளை. ஒரு இளம்பெண் கைகாட்டி லிப்ட் கேட்டாள். சந்தேகமாய் திரும்பி பார்த்தேன். வேறு யாருமில்லை. ஏறிக்கொண்டாள். அந்த நீளத்தெருவின் முனையில்மெல்லிய புன்னகையுடன் விடைபெற்றாள். இன்ஜினியரிங் கல்லூரி மாணவி அவள்.
மதிய வேளை. அறுபது வயது கிழவி வழிமறித்தாள். பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடும் பொழுது என் வம்சத்தையே வாழ்த்தி விடைபெற்றாள்.
இரவு 9.30 மணி. ஒரு திருநங்கை (ஆண் உடையில் இருந்தாள். ஆனால் கூந்தலோடு) கைகாட்டி வழிமறித்தார். அவரும் நம்மைப் போலத்தானே.... நிறுத்தி ஏற்றிக்கொண்டேன். "எங்கு போகணும்?" என்றேன். இடம் சொன்னார். "நீங்க எங்கு போகிறீர்கள்?" என்றார். சொன்னேன். "அப்ப அங்க போங்க!" என்றார். அவர் வழிமறித்த நோக்கம் வேறு. தாமதமாக புரிந்தது. மன்னிப்பு கேட்டு, அவர் சொன்ன இடத்திலேயே இறங்க சொன்னேன். "நீ வேஸ்ட்" என சைகை காட்டி போனார். இனி, இரவு நேரத்தில் லிப்ட் கொடுக்ககூடாது என முடிவெடுத்தேன்.
நால்வர் வழிமறித்து, காரில் ஏறிக்கொண்டார்கள். இறங்கும் பொழுது, பர்ஸ், வாட்ச், செல் என எல்லாவற்றையும் மிரட்டி வாங்கிச் சென்றார்கள். இதுதான் இந்த ஆண்டு சென்னையின் புத்தாண்டு செய்தி. பகீரென்று இருந்தது.
அதனால், என்னைவிட வலுவானவர்களுக்கு லிப்ட் தருவதில்லை. பணம் பறித்து விடுவார்களோ என்ற பயமெல்லாம் இல்லை. அதெல்லாம் பணம் இருப்பவர்களுக்கு இருக்கும் பயம். இறங்கும் பொழுது, பர்ஸை கேட்டால்... ஒரு செல்லாத ஐம்பது ரூபாய் நோட்டும், சில பத்து ரூபாய்கள் மட்டுமே தேறும். செல்லைக் கேட்டால்.... அதன் மதிப்போ ரூ. 300 ஐ தாண்டாது. உனக்கு எதுக்குடா பைக்கு? என கோபப்பட்டு அடித்துவிட்டால் என்ன செய்வது?
லிப்ட் கேட்டு ஏறுகிற மனிதர்களில் பலவகை. சிலர் அவர்களாகவே பேசுவார்கள். சிலரிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்வார்கள். பல சமயங்களில் குட்டி கதைகளை என்னிடம் விட்டு செல்கிறார்கள். சில கதைகள் சுவாரசியமானவை.
நான் எவ்வளவு நல்லவன்? லிப்ட் கேட்டால் மட்டுமல்ல! கேட்காமலே தருபவன். அந்த ரூட்டில் பஸ் ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே வந்து செல்லும். ஒரு நாள் ஐம்பது வயது பெண்மணி கனமான சுமைகளோடு, உச்சி வெயிலில் நடந்து போய்க்கொண்டிருந்தார். ரெம்பவும் இரக்கப்பட்டு..பக்கத்தில் போய், ஏறிக்கங்க! என்றேன். மறுத்துவிட்டார்.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, வண்டியை சர்வீஸ்க்கு விடுகிறேன். அந்தநாளில் என் அலுவலகம் செல்ல...யாரிடம் லிப்ட் கேட்டாலும், தருவதில்லை. நான் அவ்வளவு மோசமாகவா இருக்கிறேன் என நொந்து கொள்கிறேன்.
கடந்த சில ஆண்டுகளாக பலருடைய பதிவுகளையும் படித்து, நொந்து, நொந்தகுமாரனாகி இருந்தேன். இப்பொழுது வேலை நெருக்கடிகளினால், பதிவுலகில் பலருடைய பதிவுகளையும் படிப்பதிலிருந்து தப்பித்து இருப்பதால், நொந்தகுமாரனாகி இருந்த நான், சாபம் நீங்க பெற்று, இயல்பு நிலைக்கு திரும்பி குமரனாக மாறிவிட்டேன்.
Thursday, July 29, 2010
Friday, May 7, 2010
பொன்னியின் செல்வனின் இறுதி பாக (நொந்த) கிளைக்கதை - இறுதி அத்தியாயம் 8

அத்தியாயம் - 1 படிக்க
அத்தியாயம் - 2 படிக்க
அத்தியாயம் - 3 படிக்க
அத்தியாயம் - 4 படிக்க
அத்தியாயம் - 5 படிக்க
அத்தியாயம் - 6 படிக்க
அத்தியாயம் - 7 படிக்க
****
எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டது. 'இறுதிபாகம் இனி கிடைக்காது" என புரிந்தது. என்ன செய்யலாம் இனி?
சில நாள்கள் அமைதியாய் இருக்கலாம் என்ற முடிவுக்கு சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். கனவில் அவ்வப்பொழுது பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள் வருவது... குறைந்து கொண்டே போனது.
சில நாள்கள் கடந்தன. ஒரு திரையரங்கில் வரிசையில் நிற்கும் பொழுது எனக்கு முன்னே ஒருவர் சின்சியராக கையடக்க புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். துப்பறியும்... பாக்கெட் நாவலோ என நினைத்தேன். இல்லை. என்னடா! இது நம்மை போலவே இலக்கிய தாகம் உள்ளவராக இருக்கிறார் என ஆர்வமானேன். இரண்டு வரிகள் படித்த பொழுது... பொன்னியின் செல்வன் என தெரிந்தது.
சின்ன
சைஸில் எப்படி? எல்லாம் மெகா பைண்டிங் புத்தகமாயிற்றே! என யோசித்து கொண்டே... அவரிடமே கேட்டேன். மலிவு விலையில் பதிப்பித்திருக்கிறார்கள். வாங்கியதாக சொன்னார். அவரிடமே முகவரி வாங்கி... அடுத்த நாளே போய் அந்த கடையில் ஆஜரானேன்.மாநிலம் முழுவதும், புத்தக கண்காட்சிகாக, குறிப்பிட்ட பதிப்பகத்தார் மலிவு விலையில் பிரசுரித்ததாகவும், வாங்கிய புத்தகங்கள் எல்லாம் கடந்த வாரம் நடந்த புத்தக திருவிழாவில் விற்று தீர்ந்து விட்டதாகவும், மேலும் நிறைய புத்தகங்களுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கடைக்காரர் உற்சாகமாக தெரிவித்தார்.
"ஒரு பிரதி இருக்கா?" என்றேன் பாவமாய்.
"புத்தக திருவிழாவிலேயே... ஸ்டாக் இல்லை.. ஸ்டாக் இல்லை சொல்லி சொல்லியே என் வாய் வலித்து விட்டது" என்றார்.
"போயா! நீங்களும் புத்தகமும்?"
திரும்பி பார்க்காமல் வீடு போய் சேர்ந்தேன்.
இனி....
முயற்சிகள் தொடராது! முடிவுரை மட்டும் இனி எழுதுவேன்!
இணைப்பு :
பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களும்!
Subscribe to:
Posts (Atom)