Tuesday, August 9, 2011

வீடு

வாசல் தெளிப்பு
பாத்திரம் கழுவுதல்
சமையல் செய்தல்
துணி துவைத்தல்
வீட்டை பராமரித்தல்
இ‍தையே
திரும்ப திரும்ப செய்யும்படி நிர்ப்பந்தித்தால்..
இரண்டு ஆண்டுகளில் ‍ நிச்சயம்
தற்கொலை செய்து கொள்வேன்!

Monday, August 1, 2011

நினைவில் எறியப்பட்ட கல்!


படித்த கவிதை
நினைவுகளை கிளறி
புதிய சிறுகதைக்கு நகர்த்துகிறது!

போகிற போக்கில் கேட்ட அனுபவம்
என் பழைய தவறுகளை நினைத்து
நாண வைக்கிறது!

எல்லாம் தனித்தனி போல தெரிந்தாலும்,
எல்லாவற்றிக்கும்
தொடர்பு இருக்கும் போல!